Thai Pongal 2020 Wishes: Best Pongal SMS, WhatsApp, Facebook messages : தித்திக்கும் வெல்லமும், கரும்பும், புதுமஞ்சளும், நெல்லுமாய் உங்களின் வாழ்வு இனிமையாகவும், வளமுடன் இருக்க உங்களுக்கு முதலில் எங்களின் பொங்கல் நல்வாழ்த்துகள். சென்னை, கோவை, திருச்சி, மதுரை என்று நகரங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர் திரும்பியிருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…
வீட்டில் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடுங்கள். எங்களின் வாழ்த்துகளையும் மனதார ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து மகிழுங்கள்.
மேலும் படிக்க : தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் மகத்துவமும் சிறப்பும்!

தித்திக்கும் பொங்கலை உங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்.

சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும், உழவர்கள் நன்றி சொல்ல, நமக்கு மூன்று நேர உணவிற்கும் உத்திரவாதம் அளிக்கும் விவசாயிகளுக்கு நாம் இன்று நன்றி செலுத்துவோம். அவர்கள் எந்த சிரமும் இன்றி விவசாயத்தை பேணி பாதுகாத்திட நாம் எந்நாளும் அவர்களுக்கு உறுதுணையாய் நின்றிடுவோம்.

மஞ்சள், கரும்பு, புதுப்பானை, புதுநெல், வெல்லம், நெய் என்று தீராத உணவும் செல்வமும் உங்களின் வாழ்வில் என்று நிறைந்திருக்கட்டும். நாளை அதிகாலையில் சூரிய பகவானிடம் வேண்டிக் கொண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திருங்கள்!