Thair Sadam recipe Thair Sadam curd rice : ஜில்லுனு தயிர் சாதம் சாப்பிட நினைப்பவர்களுக்கு அழகான வண்ணக் கோலத்துடன் தயிர் சாதம். தயிர் சாதம் பெரும்பாலோனோருக்குப் பிடித்த அருமையான உணவாகும்
Advertisment
பச்சரிசி - 1 கப்,
பால் - அரை கப்,
புளிக்காத புதிய தயிர் - ஒன்றை கப்,
இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிது,
கடுகு - அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 3,
பொடியாக நறுக்கிய முந்திரி - 4 டேபிள் ஸ்பூன்,
திராட்சை - 20,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சாதத்தை குழைவாக வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் தாளிதக் கலவை, சேர்த்து நன்றாக கலக்குங்கள்.