தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன்.
Advertisment
சென்னைஇராணிமேரிக் கல்லூரியில், பனிரெண்டு ஆண்டுகள்ஆங்கில விரிவுரையாளராகப் பணி, கவிஞர், பரதநாட்டியக் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர்.
இவர் தம்பி தங்கம் தென்னரசு தமிழக அரசின் மின்துறை அமைச்சராக இருக்கிறார். இவர்களின் தந்தையார் தங்கபாண்டின் தி.மு,க ஆட்சியில் அமைச்சராகவும், கட்சியின் முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர் என்பதால் இந்த குடும்பத்திற்கும் தி.மு.க-கட்சிக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
விருதுநகர் மாவட்டம் – மல்லாங்கிணறு எனும் கிராமத்தில் பிறந்த இவர், இப்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்…
சமீபத்தில் Galatta Voice யூடியூப் சேனலில் வெளியான தமிழச்சி தங்கபாண்டியன் ஹோம் டூர் வீடியோ டிரெண்ட் ஆகியது.
பராம்பரியம், நவீனம் கலந்த ஒரு அழகான வீடு இது. வீட்டுக்குள் நுழையும் போதே வாசலில் யானை சிலைகளுடன், கோயிலில் இருப்பது போக கல் படிக்கட்டுகள், அதில் குட்டி குட்டி அலங்காரச் செடிகள், உள்ளே நுழைந்த்தம் அதில் குட்டி வரவேற்பறை, சிரிக்கும் புத்தர் என வீடு முழுக்க பாசிட்டிவ் வைப்ஸ் நிறைந்திருக்கிறது…
தொடர்ந்து உள்ளே போனால் லிவிங் ரூம், அங்கே செட்டிநாடு ஸ்டைலில் மர வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய கதவு அந்த அறையை அலங்கரிக்கிறது. அதனுடன் தமிழச்சி அம்மாவின் மெழுகு சிலை, கலைஞர் உடன் எடுத்த புகைப்படம், நடராஜர் சிலை, அப்பாவின் படம், மிசாவின் போது அப்பா எழுதிய கடிதம், சின்ன சின்ன பரிசுகள், பேரன், பேத்தி புகைப்படங்கள் என அந்த அறை முழுவதும் தமிழச்சியின் பல நினைவுகள் நிரம்பி இருக்கிறது.
அந்த வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“