/indian-express-tamil/media/media_files/2025/10/15/naga-thali-2025-10-15-16-03-51.jpg)
சிறியா நங்கை, பெரியா நங்கை செடிகள் அதிக மருத்துவ குணம் கொண்ட செடிகளாகும். இந்த வரிசையில் நாகதாளி செடியும் இடம்பெற்றுள்ளது. பொதுவாக இந்த நாகதாளி செடி பாம்புகளை விரட்ட உகந்த செடியாக உள்ளது. பாம்புகள் பொதுவாக மழைக்காலத்தில் தான் வீட்டினுள் வரும். அதாவது, உங்கள் வீட்டில் அருகில் காடுகள் போன்று செடிகள் குவிந்து கிடந்தால் அந்த செடிகளின் பச்சை இலை வாடைக்கு பாம்புகள் வரும்.
அதேபோன்று, எலிகள் எங்கு இருக்கிறதோ அங்கு பாம்புகள் வரும். எலிகளின் எச்சங்களை பின் தொடர்ந்து பாம்புகள் வருவதாக கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் நீங்கள் புறா, பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கும் பொழுது அவைகளுக்கு உணவு வைப்பீர்கள். இந்த உணவை செல்லப் பிராணிகள் உண்ணும் பொழுது உணவு வைக்கப்பட்டிருக்கும் இடம் முழுவதும் உணவு சிதறி கிடக்கும்.
இதை பார்த்த நாம் என்ன செய்வோம் அதை உடனே சுத்தம் செய்ய மாட்டோம். இந்த உணவு வாசனையை பிடிக்கும் எலிகள் சிதறி கிடக்கும் அந்த உணவுகளை உண்ணும் நிலையில் எலிகளின் எச்சங்களை வைத்து பாம்புகளும் அந்த வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வரும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று ஈரமாக இருக்கும் இடங்களிலும் பாம்புகள் வரும்.
மழைக்காலத்தில் வீட்டிற்கு அருகில், தெருக்களில், சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கும். இந்த இடங்களில் பாம்புகள் சட்டென வந்துவிடும். அதனால் உங்கள் வீட்டருகில் தண்ணீர் தேங்கி கிடந்தால் அவற்றை உடனே சுத்தம் செய்துவிடுங்கள். அதுமட்டுமல்லாமல், மழைக்காலத்தில் தான் மக்கள் வீட்டின் அருகில் இருக்கும் பொந்துகள் போன்றவற்றை அடைப்பார்கள். ஏனென்றால் மழைக்கு பாம்புகள் அந்த பொந்தை வசிப்பிடமாக்கிவிடும்.
இப்படி மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளை நம் வீட்டின் அருகில் அண்டவிடாமல் இருக்க வைக்க உதவும் செடி தான் நாகதாளி. இந்த செடி இரண்டு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரக் கூடிய செடியாகும். இதன் இலைகள் கொத்தமல்லி இலைகளை போன்று இருக்கும். இதில் பூக்கும் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உங்கள் வீட்டின் அருகில் பாம்பு சட்டைகள் இருந்தாலோ, பாம்பு நடமாட்டம் இருந்தாலோ இந்த செடியை உங்கள் வீட்டில் நட்டு வைத்துவிடுங்கள். இந்த செடியின் மணத்திற்கே பாம்பு உங்க வீட்டு பக்கம் எட்டிக் கூட பார்க்காது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.