இனி சர்பிரைஸ் கொடுப்பது பற்றி டென்ஷன் வேண்டாம். அதற்குத்தான் இவர்கள் இருக்கிறார்கள்.

சர்பிரைஸ் மட்டுமே பரிசாக அளிக்க களமிறங்கி 10 வருடங்களாக வெற்றிப்பாதையில் செல்கிறது தி6.இன் சர்பிரைஸ் பிளேனர்ஸ். இவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே சர்பிரைஸ் என்று சொன்னவுடன் நம் அனைவரிடம் ஒரு ஆர்வம் பிறக்கும். சர்பிரைஸ் பெறுவது ஒரு உற்சாகம் என்றால் சர்பிரைஸ் கொடுப்பதுதான் பெரிய சவால். என்ன செய்யலாம், வித்தியாசமாக இருக்க வேண்டுமே என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்வோம். ஆனால் அது போன்ற டென்ஷன் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது தி6.இன் (the6.in).

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, என்றாவது சர்பிரைஸ் அளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் ஆசையை அன்போடு நிறைவேற்றி வருகிறது the6.in நிறுவனம். 2009ம் ஆண்டு திரு. சக்திவேல் பன்னீர்செல்வம் என்பவரால் துவங்கப்பட்டது. அப்படி என்னவெல்லாம் இவர்கள் செய்கிறார்கள் என்று உங்களுக்கு தோன்றலாம். சக்திவேலிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நடத்திய உரையாடலைப் படித்தால் உங்களின் குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.

– சக்திவேல் என்றதும் பலருக்கு தெரியாத உங்களின் பின்னணி என்ன? உங்களைப் பற்றி சொல்லுங்கள்:

The6.in founder Sakthivel

The6.in founder Sakthivel

என் அப்பா மில்லில் வேலை செய்தார். அம்மா குடும்பத்தை பார்த்துக்குறாங்க. எங்கள் குடும்பத்திலேயே முதன் முதலில் பட்டம் பெற்றவன் நான் தான். நான் படிக்கும்போதே 1998ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு ஒன்றில் என் அப்பா வேலை இழந்துவிட்டார். பின்னர் உறவினர்களின் உதவியோடு படித்து முடித்தேன். 10ம் வகுப்புக்குப் பிறகு, மெகேனிக்கல் இஞ்சினியரிங்கில் டிப்லொமா படித்தேன். படித்து முடித்த உடனே எனக்கு ஒரு ஃபேக்டரியில் வேலையும் கிடைத்து விட்டது. 2002ம் ஆண்டு என்னுடைய முதல் வேலைக்கு நான் சென்றேன். அப்போது எனக்குச் சம்பளம் 2,500 ரூபாய். அதன் பிறகு முதல் 5 வருடத்தில், 7 நிறுவனங்களுக்கு மாறிவிட்டேன். என்னுடைய சம்பள தொகையை அதிகப்படுத்தவே இப்படிச் செய்தேன். பின்பு 5 வருடத்திற்குப் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன், அங்கு 8 வருடங்கள் வேலைப் பார்த்தேன். பிரபலமான நிறுவனங்களிலும் வேலைப்பார்த்துள்ளேன்.

பின்னர் 2009ம் ஆண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில், தொழில் தொடங்குவது பற்றி யோசனை எழுந்தது. வாழ்க்கை ஒரே மாதிரி சென்று கொண்டிருந்தது. தினமும் வேலைக்கு சென்றுகொண்டே தொழில் சம்பாதிக்க முடிவு செய்தோம். இப்படித்தான் சுயதொழில் தொடக்கம் நடந்தது.

– சர்பிரைஸ் பிளேனர்ஸ் தொழிலைத் துவங்க எப்படி முடிவு செய்தீர்கள்?

the6.in

நாங்கள் தொழில் துவங்கிய நேரத்தில் எல்லாம், ஸ்டார்ட் அப் என்று ஒன்று கிடையாது. எல்லமே பிஸினஸ் தான். பிஸினஸ் துவங்க வேண்டுமென்று முடிவெடுத்த அடுத்த நிமிடமே ஒரு பேப்பரில், மூளையை எட்டும் அனைத்து வகையான தொழில்களையும் பட்டியலிட்டோம். டீ கடையில் துவங்கி ஹார்டுவேர் கடை போடுவது வரை யோசித்தோம். தெருவில் செல்லும்போது கண்ணில் படும் அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டோம். பின்னர், ஒரு நாள் அடுத்தகட்டமாக வித்தியாசமாகச் செய்யும் தொழில்களைப் பற்றி பேசினோம்.

அப்போது தான் சர்பிரைஸ் கொடுப்பதையே தொழிலாகத் துவங்கும் யோசனை வந்தது. பொதுவாக எல்லாருக்குமே பிடித்தவர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க பிடிக்கும். ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். எனவே வித விதமான சர்பிரைஸ் ஐடியாஸ்களை வைத்து தி6.இன் (the6.in) என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். பிறகு எங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் வைத்து மக்களை அணுகினோம். நிறையச் சொதப்பல்களுக்கு பிறகு எங்களின் தொழில் மெதுவாக முன்னேறத் துவங்கியது.

– சொதப்பல் என்றால் இதுவரை என்னவெல்லாம் செய்துள்ளீர்கள்? சரிசெய்ய முடியாத அளவுக்குப் பெரிய தவறு செய்து இருக்கிறீர்களா?

நிறையத் தவறு செய்திருக்கிறோம். எங்கள் குடும்பத்தில் முதன்முதலில் தொழில் துவங்கியதும் நான் மட்டும் தான். எனவே தொழில் நடத்துவது பற்றி எனக்கு எதுவுமே ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. வழக்கம் போல ஒரு நிறுவனத்திற்கு வேலை பார்த்துக்கொண்டே தொழிலையும் கவனித்துக்கொண்டேன். என்ன ஆனாலும் முன்வைத்த கால் பின் வைக்கக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். எங்களின் நிறுவனத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து, முதன் முதலில் கையில் எடுத்த ஐடியா முதல் அனைத்துமே தவறு தான்.

எந்த ஒரு நிறுவனத்திற்கும் நம்பர்களைப் பெயராக வைக்கக் கூடாது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் “சர்பிரைஸ், இம்பிரெஸ், எக்ஸ்பிரெஸ்” என்பதைச் சுறுக்கினால் ஆங்கிலத்தில் சிக்ஸ் என்று வரும். அதையே விநோதமாக வைக்க வேண்டும் என்று 6 என வைத்தோம். ஆனால் அதில் நிறையச் சிக்கல் ஏற்பட்டது. அந்தத் தடைகளை இதுவரை எங்களால் கடந்து வர முடியவில்லை என்றாலும் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

இதே போல கணக்குகள் முறையாக கண்காணிப்பதில் எல்லாம் பல தவறுகள் செய்துள்ளோம். எங்கள் நிறுவனம் வலுவடைந்ததே இது போன்ற தவறுகளால் தான்.

– தி6.இன் நிறுவனத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? எப்போது உங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டது?

2009ல் நான் தி6.இன் (the6.in)தொடங்கியபோது, என்னிடம் பெரிதாக டீம் எதுவும் கிடையாது. நான் என் நண்பர்கள் உதவியுடன் நடத்தினேன். அது வரை சிறிய பிராஜெக்டுகள் மட்டும் எடுத்து வந்தோம். பின்னர் 2015ம் ஆண்டு தான் இந்தத் தொழிலில் முழு தீவிரத்துடன் களமிறங்கினேன். எனது வேலையை ராஜினாமா செய்தேன். பிசினஸின் அனைத்து வேலைகளையும் முழுமூச்சாக செய்யத் தொடங்கினேன். என்னுடன் சேர்ந்து பணியாற்ற 5 நபர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

தற்போது எங்கள் நிறுவனத்தில் எனக்கு உதவியாக 5 பேர் பணியாற்றுகின்றனர். ஃப்ரீலான்ஸராக 60 பேர் பணியாற்றுகின்றனர். நான் ஒரு முக்கிய நபரைப் பற்றி நிச்சயம் குறிப்பிட வேண்டும். எங்களுடைய முக்கிய பணியை வில்ஸன் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தில் கன்சல்டண்ட் மற்றும் மார்க்கெட்டிங் துறையை அவர் கவனித்துக் கொள்கிறார். எந்த நேரத்தில் மக்கள் தொடர்பு கொண்டாலும் பொறுமையுடன் நிலையைக் கையாளுவார். எங்களுக்கு பிராஜெக்டுகளை பெற்றுத் தருவதில் அவருக்கு ஒரு முக்கிய பங்குள்ளது.

என்னுடன் இருக்கும் 5 பேரும் எனக்கு எந்தவித கவலையும் இல்லாமல், தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராமல் நடத்த உதவி செய்து வருகிறார்கள்.

– உங்கள் நிறுவனத்தை மக்களிடம் கொண்ட சேர்க்க என்ன முயற்சி எடுக்கப்பட்டது?

மார்கெட்டிங். இந்த வார்த்தை தான் ஒரு நிற்வனத்திற்கு பெரிய சவால். எனக்கு மார்க்கெட்டிங் மிகவும் பிடித்த ஒன்று. எனவே தி6.இன் நிறுவனத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நிறைய யோசனைகளில் இறங்கினோம். குழுவாக அமர்ந்து ‘எதை செய்தால் மக்கள் நம்மைத் திரும்பி பார்ப்பார்கள்’ என்று ஆலோசித்தோம். எங்களின் முதல் மார்க்கெட்டிங். 2009ம் ஆண்டு ஹெரிட்டேஜ் பால் டிப்போ அருகில் நடந்தது. முன்னதாக சமூக வலைத்தளத்தில் மக்களிடம் பரிட்சையம் ஆக முயற்சித்தோம். அதன் பிறகு, நேரடியாக மக்கள் அணுக முடிவெடுத்தோம்.

நிறுவனம் தொடங்கி முடித்தோம். அடுத்து மக்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு முதல் முயற்சியாக, பேனர், போஸ்டர் மற்றும் பேம்பிளட் தயாரித்தோம். ஹெரிட்டேஜ் பால் டிப்போ வாசலில் ஒரு ஸ்டால் அமைத்து மக்களுடன் உரையாடினோம். அனைவரிடத்திலும் சர்பிரைஸ் பிளேனர்ஸ் என்றால் என்ன என்பதைக் கொண்டு சேர்த்தோம். அதன் பிறகு ஒரு சிலர் எங்களிடம் ஆர்டர் அளித்தார்கள்.

2014ம் ஆண்டு ஐஐடி கல்லூரியில் நடக்கும் விழா ஒன்றில் ஸ்டால் அமைத்தோம். ஆனால், எங்களைச் சுற்றியும் பிரபல நிறுவனங்கள் ஸ்டால் அமைந்திருந்தது. கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும், வித்தியாசமாக எதையாவது செய்து கூட்டத்தை இழுக்க வேண்டும் என்று யோசித்தேன். உடனே நாங்கள் அனைவரும் ஹீலியம் பலோன்கள் மற்றும் இரும்பு போல்ட் வாங்கி வந்தோம். அந்த பலூர்களின் கயிற்றில் போல்ட்டை கட்சி, அதில் போஸ்டர்களை ஒட்டி மைதானம் முழுவதும் பறக்க செய்தோம். இதில் இரும்பு போல்ட் உள்ளதால், பலோன்கள் மேலே பறக்காமல் தரையிலேயே பறக்கும். இதன் மூலம் கல்லூரியில் நடந்து செல்லும் அனைவர் கண் முன்னே இது தோன்றும்.

இதைச் செய்த ஒரு மணி நேரத்திலேயே எங்கள் ஸ்டால் முன் மாணவர்கள் அனைவரும் குவிந்தனர். பின்னர் வரும் காலத்திலும், இது போலவே வித்தியாசமாக யோசித்து விளம்பரப்படுத்தி வருகிறோம்.

– தி6.இன் நிறுவனம் சர்பிரைஸ் அளிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம். அப்படியானால் என்னென்ன வகையில் சர்பிரைஸ் பட்டியல் உங்களிடம் உள்ளது?

எங்கள் நிறுவனத்தில் ஆடல், பாடல், கேக் கட்டிங் என்று பலவகையான சேவைகள் உள்ளது.

1. Quickie

Quickie team

Quickie singing team

நீங்கள் யாருக்கு சர்பிரைஸ் கொடுக்க நினைக்கிரீகளோ, அவர்கள் முன்பாக திடீரென்ற ஒரு நபர் கிட்டாருடன் தோன்றி, அவர்களுக்குப் பிடித்த பாடலைப் பாடுவார். பாடல் பிடிப்பவர்களுக்கு இந்த சர்பிரைஸ் நிச்சயம் பிடிக்கும்.

2. Flashmob

Flash-mob

Flash-mob dancing team

இந்த வெரைட்டி தான் எங்களிடம் பிரபலம். உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு நடனம் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்த சர்பிரைஸை ரசிப்பார்கள். 8 பேர் கொண்ட இந்தக் குழுவில், முதலில் ஒருவர் ஆடத் தொடங்குவார், அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராகக் குழுவில் இணைந்து ஆடுவார்கள்.

3. Box of Balloons

box of baloons

box of baloons surprise

ஒரு பெட்டி நிறைய ஹீலியம் பலூன்களை அடக்கி வைத்திருப்போம். அதற்குள்ளே ஒரு நபரையும் ஒலித்து வைத்து சர்பிரைஸ் தருவோம் அல்லது பரிசு பொருட்களையும் ஒலித்து வைத்து சர்பிரைஸ் தருவோம். குறிப்பாக, உங்களுக்குப் பிடித்தவர்கள் முன்பு திடீரென தோன்றினால், அவர்கள் மகிழ்ச்சியாகி விடுவார்கள். அதுவே ஒரு பெட்டியில் இருந்து பலூன்களை பறக்க விட்டு வெளியே வந்தால் அதிர்ச்சியில் உரைந்து நிற்பார்கள்.

4. Acapella

Acapella

Acapella singing team

இது 4பேர் கொண்ட குழு. நன்றாக பாடத் தெரிந்த 4 பேர் ஒரு கிட்டாருடன், நீங்கள் சர்பிரைஸ் செய்ய நினைப்பவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடி அசத்துவார்கள்.

5. Cabana Dinner

Cabana surprise dinner

Cabana surprise dinner

காதலர் தினத்தன்று இதுதான் ஸ்பெஷல். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ரொமேண்டிக் டேட் செல்ல இது ஒரு அழகான சந்தர்ப்பம். நீச்சல் குளம் அருகில், இருவருக்கு மட்டும் டேபிள் சேர் அமைத்து, கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்வோம். அன்று இருவரும் கழிக்கும் அந்த நொடிகளை வாழ்நாள் முழுவதும் மறக்காதபடி இருக்கும்.

இது போல பலவகை உள்ளது. எங்களின் இணையதளத்தில் சென்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

– பட்டியலைக் கேட்ட உடனே ஆர்வம் வருகிறது. உங்களுக்கு பொது சேவைகளில் நிறைய ஆர்வம் என்று தெரிவித்திருந்தீர்கள். உங்கள் நிறுவனம் மூலம் சமூக அக்கரைக்காக எதாவது செய்ததுண்டா?

நிச்சயமாக. இதுவரை நான் செய்வது அனைத்து பணம் சம்பாதிக்கச் செய்தது. ஆனால் எல்லா வருடமும் கேன்சர் மருத்துவமனைக்குச் சென்று அங்கு இருப்பவர்களுக்கு இலவசமாகப் பல நிகழ்ச்சிகள் நடத்துவோம். அதை “Surprise for a Cause” என்று கூறுவோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சந்தோஷம் பற்றித்தான் அன்றைய பொழுது முழுவதும் யோசிப்போம். அவர்கள் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பதில் எங்களின் திருப்தி அடங்கியுள்ளது.

இவ்வாறு தொழிலில் சிறப்பாகச் செழித்து வரும் தி6.இன், பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், வாழ்வில் தினந்தோறும் போராட்டத்தை சந்திக்கும் மக்களுடன் அழகிய தருணங்களை கழிக்கிறது. இதனை அவர்கள் குடும்பத்தினர் மற்றும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு, பெங்களூரு மற்றும் ஹைத்தராபாத் உட்பட பல்வேறு இடங்களில் ஆர்டர்கள் எடுத்து வரும் இவர்களை, முகநூல் மூலமாகவும், இணையதளத்தின் (www.the6.in) மூலமாகவும் வாடிக்கையாளர்கள் அவர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close