scorecardresearch

ஜெஸ்ஸி டூ கத்திஜா: திரைத் துறையில் சமந்தாவின் 13 வருடங்கள்: டிரெண்டாகும் ஹேஷ்டாக்

சமந்தா திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் #13PhenomenalYrsOfSamantha டிரெண்டாகி வருகிறது.

ஜெஸ்ஸி டூ கத்திஜா: திரைத் துறையில் சமந்தாவின் 13 வருடங்கள்: டிரெண்டாகும் ஹேஷ்டாக்

சமந்தா திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் #13PhenomenalYrsOfSamantha டிரெண்டாகி வருகிறது.

நடிகை சமந்தா ’விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதேவேளையில் இந்த திரைப்படத்தின் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக  தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த ’பானா காத்தாடி’ திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளிவந்தது. அந்த படம் மூலம் அனைவருக்கும் அறியப்படும் நடிகையாக மாறினார். தொடர்ந்து 2012-ம் ஆண்டு வெளியான ’நான் ஈ’ திரைப்படம்  சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சமந்தாவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் அதே ஆண்டு ஜீவா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இது சமந்தாவை முன்னணி  கதாநாயகி ஆக மாற்றியத் திரைப்படம். விஜய்யோடு அவர் நடித்த தெரி, மெர்சல் ஆகியவையும் வசூல் ரீதியாக ஹிட்டானது. இதுபோல சீமராஜா, இரும்புத் திரை, யு டர்ன் ஆகிய படங்கள் தொடர்ந்த் வெளியாகி அவர் முன்னணி நடிகை வரிசையில் தொடர்ந்து நீடிக்க வைத்தது.

இந்நிலையில் எந்த கதாநாயகியும் நடிக்க யோசிக்கும் கதாபாத்திரத்தில் கூட சவாலாக எடுத்து நடித்தார். ’சூப்பர் டிலக்ஸ்’ படத்தை, அவர் நினைத்திருந்தால் வேண்டும் என்று மறுத்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

சமந்தா மிகவும் மகிழ்வாக 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமண உறவு விவாகரத்தில் முடிந்தபோதும், அவர் அதை துணிவுடன் எதிர்கொண்டார். விவாகரத்தில் காரணமே, சமந்தா என்று விமர்சிக்கப்பட்ட போதும். அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

தொடர்ந்து படங்கள் நடித்தார். இவர் நடித்த ‘ஓ பேபி’ என்ற தெலுங்கு திரைப்படம், சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், அவர் நடித்த கத்திஜா காதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அவர் ஒரு அறியவகை  நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.’ சில நாட்கள் என்னால் எழுந்துகொள்ள கூட முடியாது. கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று கண்ணீர் வழிய பேட்டியளித்தார்.

ஒரு நடிகை 5 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறை இருப்பதே கடினம் என்ற நிலையில் சமந்தா 13 ஆண்டுகள் கதாநாயகியாக தொடர்வது ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா போலவே சமந்தாவின் முன்னேற்றத்தை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Thirteen years of samantha ruth prabhu