ஃபேஷனை இவரிடமிருந்துதான் கற்க வேண்டும்! அசத்தும் 88 வயது பாட்டி

அந்தந்த காலத்திற்கு ஏற்ப ‘ஃபேஷனாக’ மாற நிச்சயம் வயது ஒரு தடையில்லை என தைவானை சேர்ந்த இந்த 88 வயது பாட்டி மூன் லின் நிரூபித்துவிட்டார்....

அந்தந்த காலத்திற்கு ஏற்ப ‘ஃபேஷனாக’ மாற நிச்சயம் வயது ஒரு தடையில்லை என தைவானை சேர்ந்த இந்த 88 வயது பாட்டி மூன் லின் நிரூபித்துவிட்டார். பாட்டி என்றவுடன், வீட்டின் மூலையில் அமர்ந்துகொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் காட்சி அளிப்பார் என நினைத்துவிடாதீர்கள். அதுதான் இல்லை. கிழிந்த ஜீன்ஸ், இளைஞர்கள் அணியும் டீ-ஷர்ட்டுகள், ‘தெறி’ திரைப்படத்தில் விஜய் அணியும் டாலடிக்கும் கண்ணாடி எல்லாவற்றையும் அணிந்துகொண்டு இந்த பாட்டி 88 வயது ‘யூத்’-ஆக காட்சித் தருகிறார். நிச்சயம் இந்த பாட்டியின் ஸ்டைலில் இருந்து நீங்கள் எதையாவது கற்றுக்கொள்வீர்கள் என்பது உறுதி.

ஃபேஷனில் மட்டுமில்லை, தொழில்நுட்பத்திலும் அப்டேட்டாக இருக்கிறார். இவர், அவரின் விருப்பப்படி அணிந்துகொள்வதை எல்லாம் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார். அவருடைய ஒரு பதிவில் இப்படி குறிப்பிடுகிறார். “88 வயதில் இருப்பதென்பதன் நன்மையே நாம் எதை அணிய வேண்டும் என நினைக்கிறோமோ அதை செய்வதுதான்! யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது! ஒவ்வொரு நாளும் எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நாளைக்கு நான் டாட்டூ போட்டுக்கொள்ள முடியுமா? 88 வயதில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது!” என பதிவிட்டிருக்கிறார்.

நியூ ஜெர்சியில் தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவர் குறிப்பிட்டவை இவை: “நியூ ஜெர்ஸி! என்னுடைய நண்பரிடமிருந்து எனக்கு தகவல் ஒன்று வந்தது. தைவானில் உள்ள இளைஞர்கள் தங்கள் கனவுகளை அடைவதற்கு தேவையான தைரியத்துடன் இருக்கின்றனர்”, என குறிப்பிட்டார்.

இந்த பாட்டியை 70,000 பேர் இன்ஸ்டகிராமில் தொடர்கின்றனர். “இந்த உலகமே இளைஞர்களால் இயங்குகிறது”, என பதிவிட்டார்.

இதோ அவருடைய அசத்தல் புகைப்படங்கள்:

中午好!今仔日揪熱ㄟ!打給愛拎咖賊水唷!哇咩來去七桃!催哇ㄟ冰友呷崩!????????

A post shared by 林莊月里 (@moonlin0106) on

今仔日要去面試一個工作,聽共撈闆乾那20幾歲,哇要穿嘎咖趴咧!祝福哇順哩!

A post shared by 林莊月里 (@moonlin0106) on

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close