சர்ப்ரைஸ் பயணம் செல்ல ஆசையா? இவர்கள் தீர்மானிப்பார்கள் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என

பயணத்திற்கு தயார் செய்வது மட்டும்தான் நம்முடைய வேலை. எங்கு செல்கிறோம் என்பது, அந்த இடத்தை அடைந்தவுடன் தான் நமக்கே தெரியவரும்.

வரும் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி. திங்கள் கிழமை சுதந்திர தினம். 4 நாட்கள் கொத்தாக விடுமுறை. குழந்தைகளுடன் எங்கேயாவது பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை. ஆனால் எங்கே செல்வது என தெரியவில்லையா? அப்பொழுது இதைப்படிக்க ஏற்றவர்கள் நீங்கள் தான்.

நாம் எங்கே பயணம் செல்ல வேண்டும் என்பதிலேயே பாதி விடுமுறை நாட்கள் கழிந்துவிடும். அதைப் பற்றியெல்லாம் இனி கவலை வேண்டாம். ‘Unpland’ என்ற பயண நிறுவனம் சூப்பர் கூலாக நம்மை வழிநடத்தும். அப்படி என்ன அந்த நிறுவனம் சூப்பர் என கேட்கிறீர்களா? பயணத்திற்கு தயார் செய்வது மட்டும்தான் நம்முடைய வேலை. எங்கு செல்கிறோம் என்பது, அந்த இடத்தை அடைந்தவுடன் தான் நமக்கே தெரியவரும்.

இந்தியா முழுவதும் நாமே அதிசயிக்கும் வகையிலான இடங்களுக்கு ‘Unpland’ நிறுவனம் நம்மை அழைத்து செல்லும். ஆனால், அந்த இடத்தை அடைவது வரை நாம் எங்கு செல்கிறோம் என்பது நமக்கு தெரியாது.

இதற்காக நீங்கள் விண்ணப்பம் ஒன்றை நிரப்ப வேண்டும். அதில், உள்ள விவரங்களின் அடிப்படையில் அந்நிறுவனம் உங்களுக்கான பயணத்தை தேர்வு செய்யும். குறிப்பாக, பயணத்தின்போது நீங்கள் என்னென்ன ஜாலி விளையாட்டுகளை அனுபவிக்க வேண்டும் என நினைப்பீர்கள், எந்த மாதிரியான இடங்களுக்கு நீங்கள் செல்ல விரும்ப மாட்டீர்கள், கடந்த இரண்டு வருடங்களில் நீங்கள் பயணம் மேற்கொண்ட இடங்கள், உங்களுடைய உணவு முறை இவையெல்லாவற்றையும் நீங்கள் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

சாஹில் கபூர், சஞ்சித் ஆகியோர் இந்நிறுவனத்தின் நிறுவனர்கள். 2017-ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை துவங்கினர். இதுவரை 30 சர்ப்ரைஸ் பயணங்களை இவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து ஃபேஸ்புக்கில் சர்ப்ரைஸ் பயண நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்தனர். மூன்று நாட்களில் அந்நிகழ்விற்கு 40 பேர் ஆர்வம் காட்டினர். சாலை வழியிலான அந்த பயணமானது மும்பையில் துவங்கி, நாசிக் பகுதியிலுள்ள திராட்சை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போதிருந்துதான், பயணம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இத்தகைய சர்ப்ரைஸ் பயணங்களை இந்நிறுவனம் மேற்கொள்ள ஆரம்பித்தது.

“நிறைய இளைஞர்கள் புதிய அனுபவங்களை பெறுவதற்காக பசியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காக தான் இதை ஆரம்பித்தோம்.”, என இதன் நிறுவனர்கள் கூறுகின்றனர்.

இவர்களின் சர்ப்ரைஸ் பயணங்களுக்கு செல்ல உங்களுக்கு விருப்பமா? அவர்களின் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கான விருப்பத்தின்படி பயணங்களை தேர்வு செய்யுங்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close