Advertisment

உண்மை குற்றவாளியை கண்டுப்பிடிக்க 6 மாதம் வேலைக்காரியாக இருந்தேன்... பெண் துப்பறிவாளரின் திக் திக் அனுபவம்!

அந்த நிமிடமே எனது வேஷத்தை களைக்க முடிவெடுத்தேன்.

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெண் துப்பறிவாளர் ரஜனி

பெண் துப்பறிவாளர் ரஜனி

துப்பறிவாளர்கள் என்றவுடன் ஆண்களின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வரும். தமிழ் சினிமாவில் மட்டுமில்லை உலக சினிமாவில், வெப் சீரீஸ், நாவல்களில் கூட பெரும்பாலும் ஆண் துப்பறிவாளர்கள் குறித்த கதைதான் அதிகம் வந்துள்ளது.

Advertisment

ஒரே வேலை துப்பறிவாளர்கள் கதையில் பெண்கள் வந்தால், அப்படியும் அவர்கள் கண்டிப்பாக

அஸிஸ்டென்டாகவே காட்டப்படுவார்கள்.ஆனால் உண்மையில் ஆண்களுக்கே சவால் விடும் அளவில், இந்த துறையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் சாதித்துக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்.

ஆரம்பத்தில் துப்பறியும் பணி என்றால் என்ன என்பது அவருக்கே தெரியாது. இப்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சுவாரஸ்யமான, ஆனால் கடும் சவால்கள் நிரம்பிய இந்த பணியில் தனக்கெனத் தனி முத்திரையை பதித்திருக்கிறார் ரஜனி பண்டிட். இவர் ’டிடெக்டிவ் சர்வீஸஸ்’ என்ற பெயரிலான நிறுவனத்தை நிறுவி அதன்மூலம் துப்பறியும் பணியை மேற்கொள்கிறார்.

இதுவரை இவர் குறித்த பேட்டிகள், சிறப்புக் கட்டுரைகள் என பல செய்திகள் ஊடகங்கள் மற்றும் செய்தித்தாளில் வெளிவந்துள்ளன. ஆனால் முதன்முறையாக 25 வருட அனுபவத்தில் தான் சந்தித்த மறக்க முடியாத இரட்டைக் கொலை வழக்கு குறித்து ரஜனி பண்டிட் மனம் திறந்துள்ளார்.

publive-image

humans of Bombay Facebook page பக்கத்தில் அவரின் இந்த பதிவு இடம்பெற்றுள்ளது. இரட்டைக் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுப்பிடிக்க 6 மாத காலம் வேலைக்காரியாக நடித்து, ரஜனி பண்டிட் குற்றவாளியை தனது உயிரை பணயம் வைத்து பிடித்த திக் திக் சம்பவம்

இதோ உங்கள் பார்வைக்கு....

”உங்களால் நம்ப முடிகிறதா? நான் எனது முதல் வழக்கை தீர்த்து வைக்கும் போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அதே நேரம் பார்ட் டைம் கிளார்க்காகவும் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதே அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், தனது வீட்டில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதாக என்னிடம் கூறினார்.

இந்த திருட்டில், தனது சொந்த மருமகள் மீதே தனது சந்தேகம் இருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். அவரிடம் நான் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டேன். இல்லை.. ஆனால், சந்தேகம் உறுதி என்றார். அப்போது தான் எனது முதல் புலன் விசாரணை தொடங்கியது.

என் தந்தை சிஐடி என்பதால், ஒரு வழக்கில் எங்கு? எப்படி? விசாரணைகளை தொடங்க வேண்டும் என்பது எனக்கு தெரிந்தது. அதன் படி கொஞ்சம் கொஞ்சமாக அவரின் இல்லைத்தை நோட்டமிட தொடங்கி கடைசியில், குற்றவாளி மருமகள் இல்லை.. மகன் தான் என்பதை நிரூப்பித்தேன்.

தெரிந்தோ, தெரியாமலோ அந்த சம்பவத்துக்குப் பிறகு புலன் விசாரணையே என் தொழில் ஆனது. ஆனால் என் பெற்றோருக்கு இதில் சற்றும் விருப்பமில்லை. மற்ற பெண்களை போல் என்னையும் அவர்கள் பார்க்க விரும்பினர். ஒருமுறை எனது தந்தை இந்த தொழிலில் இருக்கும் அனைத்து பிரச்சனைகள் குறித்து என்னிடம் விளக்கினார்.

அதன் பின்பு, எனக்கு இந்த தொழில் மீது பயம் வரவில்லை. மாறாக இந்த துறையில் ஏன் பெண்ணால் சாதிக்க முடியாது என்று நினைத்தேன். என் தொழிலை ரசித்து ரசித்து, இறுதியில் எனது தொழிலே எனது குடும்பமானது.திருமணத்தில் எனக்கு நாட்டமில்லாமல் போனது.

என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத, நான் சந்தித்த கடினமான வழக்கு எதுவென்றால் அது அந்த இரட்டைக் கொலை வழக்கு தான். உண்மை குற்றவாளியை கண்டுப்பிடிக்க 6 மாதம் அவரின் வீட்டிலேயே வேலைக்காரியாக நடித்தேன்.

திருமணமான பெண்ணின் மகனும்,கணவரும் மர்மமாக கொல்லப்பட்டனர். அனைவரின் சந்தேகமும் குடும்ப தலைவி மீது தான். ஆனால் நிரூபிக்க தகுந்த ஆதாரமில்லை. ஆதாரத்தை சேகரிக்க நானே களத்தில் இறங்கினேன். கொலை நடந்த வீட்டில் வேலைக்காரியாக சேர்ந்து வீட்டிலேயே தங்கினேன். அந்த பெண்ணுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து ஆழ்ந்த நம்பிக்கையை பெற்றேன்.

ஆனால், நேரம் எனது ரெக்கார்டர் க்ளிக் ஒலி எழுப்பி என்னை மாட்டி விட்டது. அன்றிலிருந்து அந்த பெண்ணுக்கு என் மீது லேசாக சந்தேகம். அதனால் என்னை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். அப்போது தான் அந்த பெண்ணை பார்க்க மர்ம நபர் ஒருவர் வந்திருந்தார்.

அவர் வேறு யாருமில்லை, அந்தப் பெண் தனது கணவர் மகனை கொலை செய்ய ஏற்பாடு செய்திருந்த கூலிப்படை நபர். அந்த நிமிடமே எனது வேஷத்தை களைக்க முடிவெடுத்தேன். உடனே, எனது காலில் நானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டு வலியில் துடித்தேன்.

அந்த பெண் என்னை மருத்துவமனைக்கு செல் என்று அனுப்பி வைத்தார்.ஆனால், நேராக ஃபோன் பூத்துக்கு சென்றும் எனது க்ளையன்டுக்கு தகவல் கொடுத்து போலிசாரை அழைத்து வருமாறு கூறி நடந்தவற்றை விவரித்தேன். போலீஸாரும் வந்தனர். இருவரும் வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதுரை நான் சந்தித்த வழக்குகள் 80,000. இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். 57 விருதுகளையும் சொந்தமாக்கியுள்ளேன். நல்லது ஒருபுறம் என்றால், மறுபுறம் பல்வேறு கொலை மிரட்டல்கள். ஆனால், எனது பணி சுத்தமாக இருப்பதால் எனது துணிச்சலும் உறுதியாக இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் ”நான் ஒரு உள்ளூர் ஷெர்லாக் ஹோம்ஸ்”. ரெஸ்யூமுக்கான தலைப்பு பொருந்துகிறதா?” என்று முடித்துள்ளார்.

குறிப்பு:

பணிப்பெண், பார்வையற்ற பெண், கர்ப்பிணி பெண், தெருவோர வியாபாரி என பல மாறுவேடங்களில் இந்த புலன் விசாரணை பணியை மேற்கொள்ளும் ரஜனி, அலுவலகத்தில் இருப்பதுபோல் வெளியிடங்களிலும் இருக்க மாட்டார். வெளியிடங்களில் அவரை கண்டறிவதே கடினம்.

இம்மாதிரியான சவாலான பணிகளில் தைரியம் இருந்தால் பெண்கள் நம்பிக்கையுடன் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழும் ரஜனிக்கு அனைத்து பெண்களின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment