அன்னையர் தினம்.. மகனின் சந்தோஷத்திற்காக பெண்ணாக மாறிய தந்தை!

தந்தை, பெண்ணாக மாறினால் என்றால் உங்களால் நம்ப  முடிகிறதா? 

தாய்தாலந்து
தாய்தாலந்து

தந்தையும் மகனுக்குமான உறவு அவ்வளவு எளிதாக பார்ப்பவர்களுக்கு புரிந்து விடாது.  தாயுக்கும் மகனுக்குமான  உறவில் அதிகப்படியான பாசம் இருக்கும். தந்தைக்கும் மகனுக்குமான  உறவில் அதிக புரிதல் இருக்கும்.

இப்படி தந்தை மகனுக்குமான   பாசப்போராட்டம் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.  சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்தில் நடந்த சம்பவம் பலரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்துள்ளது.

மகனின் சந்தோஷத்திற்காக  தந்தை, பெண்ணாக மாறினால் என்றால் உங்களால் நம்ப  முடிகிறதா?  ஆம்,  தாய்தாலந்தில் பனுதாய் என்ற நபர் தனது 5 வயது மகனை சந்தோஷப்படுத்துவதற்காக பெண் போல் ஆடை அணிந்து, மகனின்  பள்ளிக்கு சென்றுள்ளார்.

தாய்தாலந்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த தினத்தன்று பள்ளிகளின் படிக்கும் மாணவர்கள் தங்களின்  அம்மாக்களை  பள்ளிக்கு  அழைத்து வந்து அவர்களுக்கு  பரிசு வழங்க வேண்டும்.

ஆனால் பனுதாய், தனது மனைவியை விட்டு பிரிந்து இருந்துள்ளார். இந்த பிரிவு தனது ,மகனை ஒருபோதும்  மனதளவில் பாதித்து விடக்கூடாது என்று நினைத்த பனுதாய்,  பெண் போல் உடை அணிஅந்து மகனின் பள்ளிக்கு சென்றுள்ளார்.

மற்ற பிள்ளைகள் தனது அம்மாவுடன் இருப்பதை ஏக்கத்துடன் பார்த்த 5 வயது சிறுவன்,  பனுதாய் அம்மாவாக மாறி அவர்களை போலவே உடை அணிந்து வந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் குதிக்க தொடங்கின.

அதன் பின்பு, அம்மாவும், அப்பாவும் ஆகிய பனுதாயின் காலின் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். இந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து, பள்ளி ஆசிரியர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். 1 மணி நேரத்தில் இந்த வீடியோ வைரலானது.

வீடியோவைப் பார்த்த  அனைவரும் கண்ணீருடன், பனுதாயின் செயலை பாராட்டி வருகின்றனர்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: This video of a single parent

Next Story
சுதந்திரத் தினத்தன்று நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com