Advertisment

ஆஸி., கடற்கரையில் நிர்வாணமாக கூடிய மக்கள்.. காரணம் இதுதான்.!

தோல் புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2500க்கும் மேற்பட்ட நபர்கள் ஆஸ்திரேலிய கடற்கரையில் கூடினர்.

author-image
WebDesk
New Update
Thousands of Australians strip for cancer awareness

ஆஸ்திரேலியாவில் தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாண்டி கடற்கரையில் நிர்வாணமாக கூடிய மக்கள்.

தோல் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், சிட்னியின் பாண்டி (Bondi Beach) கடற்கரையில் அமெரிக்க புகைப்படக் கலைஞரான ஸ்பென்சர் டுனிக்கிற்கு போஸ் கொடுக்க சுமார் 2,500 பேர் சனிக்கிழமையன்று (நவ.26) தங்கள் ஆடைகளைக் களைந்தனர்.

உலகில் நிர்வாண புகைப்படம் எடுப்பதில் பெயர் பெற்ற துனிக், பலர் கடலில் நிர்வாணமாக நீராடுவதற்கு முன்பு கடற்கரையில் பல போஸ்களில் படமெடுக்க மெகாஃபோனைப் பயன்படுத்தினார்.

Advertisment

நியூயார்க்கை தளமாகக் கொண்ட இந்தப் புகைப்பட கலைஞர், ஆஸ்திரேலியாவில் மெலனோமா புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இந்த ஆண்டு மட்டும் அந்நாட்டில் 17,756 பேருக்கு புதிய தோல் புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில், 1,281 பேருக்கு நோயின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த நிர்வாண புகைப்பட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2500 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment