தாறுமாறாக 'பூ' பூக்கும்... எல்லா வகை மல்லிகை செடிக்கும் ஏற்ற உரம்; இப்படி செஞ்சு குடுத்துப் பாருங்க!

செடியில் உள்ள பழைய, பூத்து முடிந்த கிளைகளை மற்றும் தேவையற்ற பாகங்களை வெட்டி நீக்குவது அவசியம். இது புதிய துளிர்கள் மற்றும் கிளைகள் வளரத் தூண்டி, அதிகப் பூக்கள் பூக்க உதவும்.

செடியில் உள்ள பழைய, பூத்து முடிந்த கிளைகளை மற்றும் தேவையற்ற பாகங்களை வெட்டி நீக்குவது அவசியம். இது புதிய துளிர்கள் மற்றும் கிளைகள் வளரத் தூண்டி, அதிகப் பூக்கள் பூக்க உதவும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
malligai2

மல்லிகைச் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்குவதற்கான எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள்  பற்றி பசுமை கார்டனிங் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். மல்லிகைச் செடியை வளர்ப்பது எளிதானது என்றாலும், அது கொத்து கொத்தாகப் பூக்க வேண்டுமென்றால், சில அடிப்படை பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். 

Advertisment

மல்லிகைச் செடி பூத்துக் குலுங்க உதவும் முக்கிய டிப்ஸ்: மல்லிகை செடி நன்கு வளர்ந்து, கொத்து கொத்தாகப் பூக்களைப் பூக்க சில எளிய பராமரிப்பு முறைகளைப் பின்பற்றலாம்.

1. கவாத்து செய்தல்: மல்லிகைச் செடியைப் பூக்க வைப்பதில் மிக முக்கியமான செயல்பாடு கவாத்து செய்தலாகும். செடியில் உள்ள பழைய, தேவையில்லாத கிளைகளை வெட்டி விடுவது அவசியம். இதனால், செடியில் புதிய தளிர்கள் (new shoots) அதிக அளவில் உருவாகி, அவற்றில் ஏராளமான பூக்கள் பூக்கும். பூத்த காம்புகளை அவ்வப்போது நீக்குவது புதிய பூக்கள் வருவதற்குத் தூண்டுதலாக அமையும்.

2. சரியான மண் மற்றும் சூரிய வெளிச்சம்: செடி வைப்பதற்கு செம்மண் உதிரியாக இருந்தால் மட்டுமே எந்த செடியாக இருந்தாலும் நன்கு வளரும். மல்லிகைச் செடிக்கு போதுமான வெளிச்சம் (சரியான சூரிய ஒளி) கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும்.

Advertisment
Advertisements

3. இயற்கையான உரங்கள்: செடியின் வளர்ச்சி மற்றும் அதிக மகசூலுக்குப் பின்வரும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம். மல்லிகை செடிக்கு அவ்வப்போது அரிசி கழுவும் தண்ணீரை ஊற்றலாம். வாரத்திற்கு இரண்டு முறை பூண்டு மற்றும் வெங்காயத் தோல்களை செடிக்குப் போடும்போது செடி அபரிவிதமான வளர்ச்சியைப் பெற்று, நிறைய துளிர்கள் விடும்.வ்இந்தத் தோல்கள் மற்றும் நாம் பூஜை அறையில் பயன்படுத்திய பூக்களின் இதழ்களைச் சேர்த்து வெயிலில் நன்கு காயவைத்தும் உரமாகப் பயன்படுத்தலாம்.

புளித்த மோர் கரைசல்: செடிக்கு அமிலத்தன்மை நிறைந்த கரைசல் தேவைப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை, புளித்த மோரில் 100 மில்லியினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் படிகாரத்தைத் தூள் செய்து கரைத்து மண்ணில் ஊற்றலாம். இது மண்ணின் அமிலத்தன்மையைச் (acidity) சரிசெய்ய உதவும். இரும்புச்சத்து குறைபாட்டைச் சரிசெய்வதன் மூலமும் செடி ஆரோக்கியமாக வளரும். இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றி மல்லிகைச் செடியைப் பராமரித்தால், உங்கள் வீட்டிலும் மல்லிகைப் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும்.

Simple and beginners tips for home gardening

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: