ஒரு ஸ்பூன் கடுகு... கொசு விரட்ட இப்படியும் வழியா? இது தெரியாமப் போச்சே!

கொசுவை விரட்ட நீங்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை என்றால், கொசுக்களை விரட்ட எளிமையான இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

கொசுவை விரட்ட நீங்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை என்றால், கொசுக்களை விரட்ட எளிமையான இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

author-image
D. Elayaraja
New Update
Musquito

பெரும்பாலான மக்கள் வீடுகளில் கொசுக்களின் தொல்லையை எதிர்கொள்வது என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இவை சிறிய உயிரினங்களாக இருந்தாலும், கொசுக்கள் மனிதர்களுக்கு தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலத்திலோ அல்லது ஈரப்பதமான சூழ்நிலைகளிலோ கொசுக்கள் அதிக அளவில் பெருகுகின்றன. இரவு நேரத் தூக்கத்தைக் கெடுப்பதில் இருந்து பல்வேறு விதமான வைரஸ் நோய்கள் வரை கொசுக்கள் காரணமாக அமைகின்றன.

Advertisment

தண்ணீர் தேங்கியுள்ள பாத்திரங்கள், பூந்தொட்டிகள், கழிவுநீர்க் குழாய்கள், பழைய டயர்கள் போன்ற இடங்களில்தான் கொசுக்கள் பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஸிக்கா வைரஸ் போன்ற வைரஸ் நோய்களைப் பரப்ப வாய்ப்புள்ளது. சில சமயங்களில் கொசுக்கடி மட்டுமே கடுமையான மன உளைச்சலுக்கும், சரும ஒவ்வாமைகள், அரிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

இந்தத் தொல்லையைக் கட்டுப்படுத்த முக்கிய வழி, வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றுவதுதான். தண்ணீர் சேமிப்பு இடங்களை மூடிகளால் மூடுவது, வாரந்தோறும் பூந்தொட்டிகளைச் சுத்தம் செய்வது, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை அமைப்பது ஆகியவை முக்கியமாக செய்ய வேண்டிய பணிகளாகும். மேலும், வீடுகளில் கொசு வலைகள், இயற்கை நறுமணப் பொருட்கள், கொசு விரட்டி ஸ்ப்ரேக்கள், கொசுவர்த்திச் சுருள்கள் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். இவை எதுவும் பலனளிக்கவில்லை என்றால், கொசுக்களை விரட்ட எளிமையான இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

கடுகு

கற்பூரம்

நல்லெண்ணெய்

செய்முறை:

சமையலறையில் தினமும் பயன்படுத்தும் கடுகு எடுத்து, அதை நன்றாக நசுக்கிக் கொள்ளவும். இதனுடன் சிறிது கற்பூரத்தைப் பொடி செய்து சேர்க்கவும். பிறகு, இந்தக் கலவையை நன்றாக கலந்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு சிறிய மண் அகல் விளக்கில் சேர்க்கவும். இதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். பிறகு, திரியிட்டு தீபம் ஏற்றவும். இது கொசுத் தொல்லையைக் குறைக்க மிகச்சிறந்த வழியாகும். இது ரசாயனம் கலந்த கொசு விரட்டிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
Advertisements
Tamil Lifestyle Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: