/tamil-ie/media/media_files/uploads/2017/09/final.jpg)
உங்கள் திருமணத்தை பற்றியே எப்போதும் யோசித்துக் கொண்டிருக்கும் அத்தை இருக்கிறார்களா உங்களுக்கு? எல்லா வீட்டு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் உங்களுக்காக மாப்பிள்ளை லிஸ்டுகளுடன் வந்து அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என வற்புறுத்துவார்களா? அரேஞ்ச்டு மேரேஜ் என்ற பெயரில் உங்களை திருமண சந்தையில் விற்க தயாராக இருக்கும் சொந்தங்கள் உங்களுக்கு அதிகமா? அப்படியென்றால் உங்களுக்காக தான் இந்த கேம்.
பாகிஸ்தானை சேர்ந்த நாஷ்ரா பலகம்வாலா என்பவர் , அரேஞ்ச்டு (Arranged) என்ற இணைய விளையாட்டை உருவாக்கியுள்ளார். Rhode Island School of Design-ல் நாஷ்ரா பலகம்வாலா படித்து வருகிறார். இந்த விளையாட்டில், மூன்று பெண்கள் தங்களுக்கு எப்போதும் வரன் தேடும் அத்தையிடமிருந்து தப்பித்து, தன் காதலர்களை கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு. இதில், திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் விருப்பமே இல்லாமல் திணிக்கப்படும் சமூக அவலங்களையும் விளையாட்டின் ஊடே நாம் அறியலாம்.
”பெண்களின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை, இந்த விளையாட்டின் மூலம் பேச வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும்.”, என விளையாட்டை உருவாக்கிய பலகம்வாலா தெரிவித்தார்.
குடும்ப பின்னணி, பணம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு வரன் தேடும் வழக்கத்தைக் கொண்டிருப்பதை களைய வேண்டும் என்பதை இந்த விளையாட்டு உணர்த்துகிறது.
”பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தங்களது விதி என நினைத்து பெரும்பாலான பெண்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், திருமணத்திற்காக தனது வீட்டிலிருந்து கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்பதை அவர்கள் கற்கவில்லை”, எனக்கூறும் பலகம்வாலா, ஒரு பெண்ணுக்கு பிடிக்காத ஒருவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.