scorecardresearch

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Tirupati
Tirupati Arjitha services

திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு இன்று (மே: 18) முதல் மே 20 ஆம் தேதி வரை தேவாஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்துக்கான அங்கபிரதட்சண டிக்கெட்டுகளின் கோட்டா வரும் மே 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

இதை பக்தர்கள் இலவசமாக தேவஸ்தான இணையதளத்தில் முன்பதி வு செய்து, அங்கபிரதட்சண சேவையில் பங்கு கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tirupati devathanam august month arjitha services online ticket booking