Cooking hacks: தக்காளி சமைக்கும்போது இதெல்லாம் ரொம்ப முக்கியம்

தக்காளி சமைக்கும் போது கண்டிப்பாக பின்றபற்ற வேண்டிய சில அத்தியாவசிய குறிப்புகள் இங்கே உள்ளன.

தக்காளி சமைக்கும் போது கண்டிப்பாக பின்றபற்ற வேண்டிய சில அத்தியாவசிய குறிப்புகள் இங்கே உள்ளன.

author-image
abhisudha
New Update
Tomato cooking hacks

Tomato cooking hacks

சுவை நிறைந்த பழுத்த தக்காளி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரெசிபிகளின் முதுகெலும்பாகும். இதில்’ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பழுத்த தக்காளியில் உள்ள லைகோபீன் தான், தக்காளிக்கு சிவப்பு நிறத்தை தருகிறது. இது, கடுமையான புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

Advertisment

தக்காளி வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும்.  தக்காளியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அதை சமைப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

தக்காளி சமைக்கும் போது கண்டிப்பாக பின்றபற்ற வேண்டிய சில அத்தியாவசிய குறிப்புகள் இங்கே உள்ளன.

publive-image
தக்காளி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரெசிபிகளின் முதுகெலும்பாகும்.
Advertisment
Advertisements

நீங்கள் தக்காளியை எதனுடன் சமைக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தக்காளியில் உள்ள அதிக அமில உள்ளடக்கம், வேறு சில உணவுகளை சமைக்கும் செயல்முறையை தாமதப்படுத்துகிறது.

தக்காளியுடன் சேர்க்கப்படும் உலர்ந்த பீன்ஸ், தக்காளி சேர்க்காத பீன்ஸை விட சமைப்பதற்கு 20 சதவீதம் அதிகம் நேரம் எடுக்கும்.

உங்களிடம் வழக்கத்திற்கு மாறாக அதிக தக்காளி இருந்தால், மேலும் நீங்கள் இனிப்பு சாஸ் விரும்பினால், ரெசிபியில் சர்க்கரைக்கு பதிலாக இறுதியாக துருவிய கேரட்டை சேர்க்கவும். இது சர்க்கரைக்கு பதிலாக, இயற்கையான இனிப்பை அதிகரிக்கும்.

எச்சரிக்கை

தக்காளி சமைக்கும் போது அலுமினியம் அல்லது வேறு எந்த மென்மையான உலோக பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். தக்காளியில் உள்ள அமிலத்தன்மை அதனுடன் ஒத்து போகாது. அவை ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்குகின்றன, இது சமைத்த தக்காளியை கசப்பாக மாற்றும் மற்றும் நிறத்தை மங்கச் செய்யும், மேலும் உணவு, அலுமினியத்தில் சிலவற்றை உறிஞ்சிவிடும்.

தக்காளியில் உள்ள அமிலம், அலுமினிய சமையல் பாத்திரங்களை குழி மற்றும் நிறமாற்றம் செய்யலாம்.

தக்காளி தோல் உரிக்க

முதலில் தேவையான அளவு தக்காளி எடுத்து, அனைத்தையும் பாதியாக வெட்ட வேண்டும். பிறகு ஒரு சூடான கடாயில் சிறிது ஆலிவ் எண்ணெயை ஊற்றி, அதில் வெட்டிய பாகம் பாத்திரத்தில் படுமாறு வைத்து, மூடி வைத்து மூட வேண்டும்.

5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்கும்போது, தக்காளியில் இருந்து தோல் லேசாக வெளியே வந்திருக்கும். உங்கள் இரு விரல்களைப் பயன்படுத்தி இந்த தோல்களை எளிதாக அகற்றலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: