நம்மை திரைப்படங்களில் மகிழ்விக்கும் பிரபல நட்சத்திரங்கள் பலர் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுப்பவர்கள் தான். அப்படி பல்வேறு நோய்கள், உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை எடுக்கும் 10 திரை பிரபலங்களின் பட்டியல் இதோ:
1. தர்மேந்திரா:
கடந்த 20 வருடங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் நடிகர் தர்மேந்திரா. அதனாலேயே மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார்.
2. ரஜினிகாந்த்:
கடந்த 2011-ஆம் ஆண்டு ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலு, சிங்கப்பூரிலும் சிகிச்சை எடுத்தார்.
splenic rupture& myasthenia gravis ஆகிய நோய்களால் அமிதாப் பச்சன் பாதிக்கப்பட்டார். கடந்த 1982-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மண்ணீரல் கிழிந்து ரத்தம் வீணானது. மேலும், myasthenia gravis எனும் உடல், மன தளர்வு நோய்க்கு ஆட்பட்டார். தற்போது குணமடைந்து வருகிறார்.
4. சல்மான் கான்:
trigeminal neuralgia எனப்படும் முக்கோண நரம்பு மண்டலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகிறார் சல்மான் கான். இதனால், முகவாய், கன்னம் ஆகியவற்றில் வலி ஏற்படும். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து தற்போது குணமாகி வருகிறார்.
5. சோனம் கபூர்:
பதின் பருவத்திலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை எடுத்து வருபவர் நடிகை சோனம் கபூர். தன்னுடைய உணவு கட்டுப்பாட்டால் சீரான உடல் நிலையில் இருக்கிறார்.
6. ஹிருத்திக் ரோஷன்:
மூளை உறைவு பல வருடங்களாக பாதிக்கப்பட்டு, கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 7-ஆம் தேதி அதற்காக சிகிச்சை எடுத்தார். கிரிஷ்-3 திரைப்படத்தின் துவக்க விழாவில், “நான் அற்புதமாக இருக்கிறேன்”, என ஹிருத்திக் ரோஷன் உற்சாகமாக கூறினார்.
7. ஷாருக்கான்:
இவர் கிங் ஆஃப் கான் மட்டுமல்ல, கிங் ஆஃப் சர்ஜரியும் கூட. கடந்த 25 வருடங்களில் 8 அறுவை சிகிச்சைகள் இவருக்கு செய்யப்பட்டன. விலா, கணுக்கால், முட்டி, கழுத்து, கண், தோள்பட்டையில் இவருக்கு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
8. சைஃப் அலிகான்:
myocardial infractions-ஆல் பாதிக்கப்பட்ட சைஃப் அலிகானுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இந்த நோய் பரம்பரை நோய்.
9. லிசா ரே:
மல்டிபிள் மைலோமா புற்றுநோயால் இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
10. மனிஷா கொய்ராலா:
கடந்த 2012-ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மனம் தளராமல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து தற்போது நலமுடன் உள்ளார்.