உலகின் 100 சிறந்த ஹோட்டல்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 ஹோட்டல்கள்!

உலகத்தில் சிறந்த 100 ஹோட்டல்கள் குறித்த பட்டியலை டிராவல்+லெஃஸர் மேகசின் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 ஹோட்டல்கள் இடம்பெற்றுள்ளன.

உலகத்தில் சிறந்த 100 ஹோட்டல்கள் குறித்த பட்டியலை டிராவல்+லெஃஸர் மேகசின் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 6 ஹோட்டல்கள் இடம்பெற்றுள்ளன.

சுற்றுலா பயணங்கள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் தானே. அப்படிச் செல்லும் சில சுற்றுலாவின் போது, தங்கும் ஹோட்டல்களில் சில சமயம் ஏற்படு அசௌகரியத்தினால் அந்த சுற்றுலா பயணத்தையே சொதப்பிவிடும். இந்த நிலையில், உலகத்தில் சிறந்த 100 ஹோட்டல்கள் குறித்த பட்டியலை டிராவல்+லெஃஸர் மேகசின் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, டிராவல்+லெஃஸர் மேகசினாது உலகின் சிறந்த 100 ஹோட்டல்களை தேர்வு செய்வதற்காக, வாசகர்களிடம் சர்வே ஒன்றை மேற்கொண்டது. இந்த சர்வேவின் முடிவில், இந்த ஆண்டில் உலகின் சிறந்த 100 ஹோட்டல்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 17 ஹோட்டல்கள் மட்டுமே நகரங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

100 சிறந்த ஹோட்டல்களில், இடம்பெற்றுள்ள இந்திய ஹோட்டல்களின் எண்ணிக்கை ஒன்றல்ல, இரண்டல்ல, 6 இந்திய ஹோட்டல்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அந்த 6 ஹோட்டல்களில் 5ஹோட்டல்கள் ராஜஸ்தானிலும், 1 ஹோட்டல் உத்திரபிரதேசத்திலும் உள்ளன.

உதய்பூரில் உள்ள ஓபராஸ் உதய்விலாஸ்(84-வது இடம்)

oberoi-udaivilas

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஓபராய் அமர்விலாஸ்(69-வது இடம்)

oberoi-amarvilas

ராய்பூரில் உள்ள ஓபராய் ராஜ்விலாஸ்(68-வது இடம்)

oberoi-rajvilas

ஜெய்பூரில் உள்ள ரம்பாஃ பேலஸ் (43-வது இடம்)
taj-rambagh_palace

உதய்பூரில் உள்ள லீலா பேலஸ் (34-வது இடம்)

leela-palace-udaipur-

ரன்தம்பூரில் உள்ள ஓபராய் வானியாவிலாஸ்(16-வது இடம்)

 oberoi-vanyavilas

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close