வெளிநாடு சுற்றுலா செல்ல விருப்பமா? வேண்டாம், இந்தியாவிலேயே உள்ள இந்த வெளிநாடுகளுக்கு செல்லுங்கள்

இந்தியாவிலேயே வெளிநாடுகளுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை அளிக்கும் வகையிலான இடங்கள் பல உள்ளன. வாருங்கள் அவற்றில் சிலவற்றை காண்போம்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நல்ல அனுபவமாகத்தான் இருக்கும். யாருக்குத்தான் வெளிநாடுகளுக்கு செல்ல கசக்கும். ஆனால், அங்கு செல்ல நம்முடைய பட்ஜெட் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா? அதனால், இந்தியாவிலேயே வெளிநாடுகளுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை அளிக்கும் வகையிலான இடங்கள் பல உள்ளன. வாருங்கள் அவற்றில் சிலவற்றை காண்போம்.

1.ஷிலாங், மேகாலயா: இந்தியாவின் ஸ்காட்லாந்து:

பசுமையான பறந்த புல்வெளிகள், எங்குப் பார்த்தாலும் பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற இயற்கை காட்சிகள், ஆறுகள் இவற்றுக்காக ஷிலாங்கை நிச்சயம் ஸ்காட்லாந்துடன் ஒப்பிடலாம்.

2. புதுச்சேரி: ஃபிரான்ஸ்

காலணியாதிக்கத்தின்போது பின்பற்றப்பட்டு வந்த டச்சு மற்றும் ஃபிரெஞ்சு கட்டுமான கலை இன்றளவும் புதுச்சேரி தக்க வைத்துள்ளது. ஃபிரெஞ்சு மக்களின் வில்லாக்களுக்கிடையே, தமிழ் கலாச்சாரத்துடன் கட்டப்படும் வீடுகளும் பார்ப்பதற்கு அழகாக உள்ளன.

3. மலானா, இமாச்சல பிரதேசம் – இந்தியாவின் குட்டி கிரீஸ்:

மலானாவில் உள்ளவர்கள் அலெக்சாண்டரின் படையில் இருந்த கிரீக் வீரர்களின் வழித்தோன்றல்களாகவே தங்களைக் கருதுகின்றனர். இதன் நிலப்பரப்பு கிரீஸ் உடன் ஒன்றாக பொருந்திப்போகும். கிரீஸில் உள்ளதுபோலவே மலையில் சிறுசிறு வீடுகள் கட்டிக்கொண்டும், மலைக்குக் கீழேயும் வீடுகள் அமைத்துக்கொண்டு இவர்கள் வாழ்கின்றன.

4. ஆலப்புழா, கேரளா: இந்தியாவின் வெனிஸ்:

நீர் வழி போக்குவரத்துதான் ஆலப்புழாவின் அழகு. அதனால் நீங்கள் அவ்வளவு செலவு செய்து வெனிஸ் நகரத்திற்கு செல்ல வேண்டாம். நீரால் கட்டமைக்கப்பட்ட ஆலப்புழாவுக்கு சென்றாலே போதும்.

5. ரான் ஆஃப் கட்ச், குஜராத்: போன்வில் சால்ட் ஃபிளாட்ஸ்:

இரவு நேரத்தில் சுற்றிப்பார்க்கத்தக்க பல இடங்கள் இங்கு உண்டு.

6. சித்திரகூட் நீர்வீழ்ச்சி, கன்னியாகுமரி: இந்தியாவின் நயாகரா:

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு செல்வதென்பது மிகவும் செலவுமிக்க பயணமாகும். அதனால், நீங்கள் சித்திரகூட் நீர்வீழ்ச்சிக்கு சென்றுவாருங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close