பயணத்தின்போது நண்பர்களிடம் சண்டைகள் வராமல் இருக்க 5 ஈஸி டிப்ஸ்

நம் வாழ்நாள் முழுதும் மறக்கவே இயலாத பயணங்களில் இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க இந்த ஐந்து வழிகளை பின்பற்றுங்கள். நிச்சயம் இந்த வழிகள் உங்களுக்குக் கைகொடுக்கும்

பெரும்பாலும் நாம் நம் நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்ளும்போது ஏதோ ஒரு கட்டத்தில் சிலருக்குள் மனக்கசப்புகள், சின்ன சின்ன சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஒவ்வொரு நண்பர்கள் வட்டாரத்திலும் வெவ்வேறு குணாதிசயங்கள், விருப்பு வெறுப்புகள் கொண்ட நபர்கள் இருப்பர். அதனால், பயணஙகளின்போது சிலவற்றை தேர்ந்தெடுப்பதில் சிலருக்குள் முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால், நம் வாழ்நாள் முழுதும் மறக்கவே இயலாத பயணங்களில் இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்க இந்த ஐந்து வழிகளை பின்பற்றுங்கள்.

1. நண்பர்கள் குழுவில் உள்ள ‘பாஸ்’-ஐ கண்டுபிடியுங்கள்:

உங்கள் நட்பு வட்டாரத்திற்குள் தனக்கென தனி வழியில் எல்லா காரியங்களையும் எளிதாகவும், பாதுகாப்புடனும் செயல்படுபவர்கள் இருப்பார்கள். அவர்களைக் கண்டுபிடியுங்கள். அவர்களை உங்கள் பயணத்தின் ‘பாஸ்’ ஆக்குங்கள். அப்போதுதான் உணவு, தங்கும் இடம் என எல்லாவற்றிலும் சிறப்பாகவும், தரமானதையும் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். தனக்கென ஒரு கோடு போட்டு செயல்படுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

2. பயணத்தின்போது நீங்களே பணம் செலுத்துங்கள்:

உங்கள் நட்பு வட்டம் ஒழுங்கானதாக கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இல்லை என நினைத்துக் கொள்வோம். அப்படியிருந்தால், பயணங்களின்போது உணவு, ஸ்நாக்ஸ் என அவ்வப்போது நேரக்கூடிய சின்ன சின்ன செலவுகளை அவர்களாகவே கவனித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் பணம் செலுத்த சொல்லி ஒருவரையே நிர்ப்பந்தத்திற்கு தள்ள வேண்டாம். இது, உங்களுக்கு இடையே ஏற்படும் மனஸ்தாபங்களை குறைக்கும்.

3. உங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்:

“நண்பர்களுடன் குரூப்பாகத் தானே பயணம் செல்கிறோம்” எனக்கூறி கொண்டு அவர்களுடனேயே ஒட்டிக்கொண்டு இருக்காதீர்கள். உங்களுக்கென பிடித்த விஷயங்களை அவர்களை விட்டுப் பிரிந்து அனுபவியுங்கள். உங்களுக்கென நேரம் ஒதுக்குங்கள். அது உங்கள் பயணத்தை இன்னும் அழகாக மாற்றும்.

4. உங்கள் ‘டயட்’ஐ ஒதுக்குங்கள்:

டயட்டில் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டு பயணத்தின்போது நீங்கள் அவர்கள் சாப்பிடும் உணவை புறக்கணித்தால் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். அதனால், முடிந்தவரை உங்களின் ‘டயட்’டிலிருந்து கொஞ்சம் விலகி இருங்கள். சுகர்-ஃப்ரீ, நட்ஸ்-ஃப்ரீ, நச்சுத்தன்மை இல்லாத உணவுகள், பால் இல்லாத உணவுகளை தவிர்க்கலாம். அதற்காக எதையுமே சாப்பிடாமலேயா இருப்பீர்கள்?

5.ரோஜா கூட்டம் வழியாக உலகத்தைப் பாருங்கள்:

மேற்கூறிய அனைத்து வழிகளும் உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால், ரோஜா கூட்டங்களின் வழியாக இந்த உலகத்தைப் பாருங்கள். அப்போது, இந்த உலகம் இன்னும் அழகானதாக இருக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close