Advertisment

திருச்சியில் அரசு மகளிர் விடுதி- இனி பணிக்கு செல்லும் மகளிருக்கு கவலை இல்லை!

தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகளை பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy

Trichy New govt working Womens hostel

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்ட கன்டோன்மென்ட் ஹெபர் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதியினை திறந்து வைத்தார்.

Advertisment

தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் பணி நிமித்தமாக, சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ உள்ளது. குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகில் தரமான பாதுகாப்பான தாங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளது

இதை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகளை பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிர்க்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பையும்  அமைத்துள்ளது.

publive-image

அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் எண் 33/9 பிளாக்-3 அபிஷேகபுரம் பொன்மலை திருச்சிராப்பள்ளி- 620004, என்ற முகவரியில் புதியதாக பணிபுரியும் மகளிர் விடுதி கட்டி முடிக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த விடுதியில் 106 படுக்கை வசதியுடன் இருவர்/நால்வர் தங்கும் அறைகள் உள்ளன.  இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24/7 பாதுகாப்பு வசதி, இலவச ஃவைபை எப்ஃஎம், இபயோமெட்ரிக், பொழுது போக்கு அறை ஆகிய நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், www.tnwhc.inஎன்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து, முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மகளிரும் இந்த வசதியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் என மகளிர்கள் இவ்விடுதிகளில் தங்கிடலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்த இவ்விடுதி திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் கோ.தவசெல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்யா, மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment