புதிதுபோல பளபளக்க... ஒரே நிமிடத்தில் கறை நீக்கும் மேஜிக் டிப்ஸ்

டைல்ஸ்களில் இருக்கும் விடாப்படியான கரைகளை போக்க இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க. எப்படிப்பட்ட கரையாக இருந்தாலும் சரியாகிவிடும்.

டைல்ஸ்களில் இருக்கும் விடாப்படியான கரைகளை போக்க இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க. எப்படிப்பட்ட கரையாக இருந்தாலும் சரியாகிவிடும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
a

டைல்ஸ்கள் மீது படியும் கடினமான கறைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது என்பது ஒரு சவாலான வேலையாகும். ஆனால், உங்கள் சமையலறை மற்றும் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி, டைல்ஸ்களின் பழைய பளபளப்பை எளிதில் மீட்டெடுக்க முடியும்.தனை எப்படி செய்வது என்று ஃப்ரெஷ் பீட் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

1. பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு காம்போ - டைல்ஸ்களுக்கு இடையில் உள்ள கறைகள் மற்றும் பிடிவாதமான அழுக்குகளை அகற்ற இந்த கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல கலக்கவும். இந்த பேஸ்ட்டை கறை படிந்திருக்கும் டைல்ஸ் பகுதியில் தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், அதனை ஸ்க்ரப் பயன்படுத்தி தேய்த்து சுத்தம் செய்தால், டைல்ஸ் புதுப்பொலிவு பெறும். ஸ்பாஞ்சில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை தெளித்து, கறை உள்ள இடத்தில் தேய்த்து சுத்தம் செய்யலாம். எலுமிச்சை சாறு ஒரு சிறந்த இயற்கை கறை நீக்கியாக செயல்படுகிறது.

2. வெந்நீர், வினிகர் மற்றும் டிடர்ஜென்ட் கலவை - கடினமான கறைகளை இலகுவாக்குவதற்கும், பூஞ்சைகள் (Fungi) மற்றும் பாக்டீரியாக்களை நீக்குவதற்கும் இந்த முறை சிறந்தது.

Advertisment
Advertisements

முதலில் கறைகளின் கடினத் தன்மையைக் குறைக்க, குளிர்ந்த நீருக்கு பதிலாக வெந்நீரைப் பயன்படுத்துவது நல்லது. வெந்நீர் கடினமான கறைகளை இலகுவாக்க உதவும். வெந்நீரில் அதிக ரசாயனங்கள் இல்லாத டிடர்ஜென்ட் பவுடர், சிறிது வினிகர் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை ஒரு பிரஷ்ஷால் டைல்ஸ்களில் தேய்த்து விடலாம். வினிகரில் உள்ள அமிலத்தன்மை பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா போன்றவற்றை நீக்க உதவுகிறது.

3. உப்பு பயன்படுத்தும் முறை - மிகவும் பிடிவாதமான அழுக்குகளை நீக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பைப் பயன்படுத்தும்போது, சுத்தம் செய்ய வேண்டிய பகுதி ஈரப்பதமாக இருக்க வேண்டும். டைல்ஸ் மீது உப்பைத் தூவி, அழுக்குப் போக வேண்டிய இடங்களில் தேய்க்கவும் (ஸ்கிரப்). தேவைப்பட்டால், உப்பு தூவிய பகுதியை இரவு முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் காலை ஸ்கிரப் செய்து சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்ய கடினமான பிரஷ்ஷைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, டைல்ஸ்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க மென்மையான ஸ்க்ரப்பரைப் பயன்படுத்துவது நல்லது.

tips to clean bathroom tiles

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: