’தாய் என்பவள் தெய்வதைக் காட்டிலும் உயர்ந்தவள் “ என்றால் அதில் மாற்றுக் கருத்து எவருக்குமே இருக்காது. ஒரு பெண் என்பவள் இப்படி தான் இருக்க வேண்டும்,இந்த வேலையைத் தான் அவள் செய்ய வேண்டும், இந்த ஊர் உலகத்தின் பேச்சுக்கெல்லாம் ஆளாகாமல் முடிந்த வரை மறைந்தே வாழ வேண்டும். இப்படியெல்லாம் அதிகப்படியான வரைமுறைகளை கொண்டிருக்கிருக்கும் வட இந்தியாவில், புதியதொரு சரித்திரத்தை படைத்தவர் தான் மஞ்சு தேவி.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மஞ்சு தேவி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை இழந்தார். ஆரம்பத்தில் உதவிக்கரம் நீட்டிய சொந்தங்கள் எல்லாம் பாதிலியே விட்டு சென்றனர்.துக்கம் ஒரு பக்கம் என்றால், பசி கொடுமை மறுப்பக்கம். கூடவே மூன்று குழந்தைகள். எதாவது வேலைக்கு சென்று பிழைக்கலாம் என நினைத்தால் பெண்களுக்கு என்ன வேலை கொடுப்பது இங்கிருந்து செல்.. செல். என்று விரட்டும் சில முதலாளிகள்.
வேறு சில முதலாளிகள், ”அழகாக இருக்கிறாய்.. உனக்கு என்ன வேலை கொடுப்பது? பிள்ளைகளை விட்டுட்டு என்னுடன் வந்து விடுகிறாயா?” .. இப்படி போன இடமெல்லாம் அவமானத்தை சந்தித்த மஞ்சு இன்று, ஆண்களுக்கு நிகராக ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/Facebook-300x169.jpg)
கூடவே, அம்மா மோகினி பக்க பலமாக இருக்க, நாள் தோறும் ரயில் நிலையத்திற்கு சென்று பயணிகளின் சுமைகளை, தனது சுமையை போக்கிக் கொள்ள சிரமம் பார்க்காமல் தூக்குகிறார். இதுக்குறித்து மஞ்சு கூறியிருப்பது, “இது என் கணவர் செய்து வந்த வேலை.ஏதோ துக்கத்திலும் ஒரு சந்தோஷம் போல் இந்த வேலை எனக்கு கிடைத்தது. முதலில் பளு தூக்க கடினமாக தான் இருந்தது. கூடவே அங்கிருந்தவர்கள் ஏளனமாக பார்த்து சிரித்ததும் உறுத்தியது. பின்பு நானே பழகிக் கொண்டேன்.. இல்லை இல்லை பழக்கமாக்கிக் கொண்டேன். நான் வேலை செய்யும் ஜெய்யூர் ரயில் நிலையத்தில் நான் ஒருத்தி மட்டுமே பெண் கூலி தொழிலாளி. இதை நான் சொல்வதற்கு எந்தவித தயக்கமும் இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2018/06/gwhbhdddhh-1-300x240.jpg)
ஆண்கள் மட்டும் செய்யும் வேலையை உன்னால் எப்படி செய்ய முடிகிறது? என்று என்னிடம் பலர் கேட்டுள்ளனர். அதற்கு எனது பதில் ஒன்று மட்டுமே. நான் பயணிகளின் சுமையை தூக்கும் போது என் கண்ணில் வந்து செல்வது என் மூன்று பிள்ளைகளின் முகங்களும்.. வெற்று வயிறும் தான்.”
/tamil-ie/media/media_files/uploads/2018/06/h6-300x225.jpg)