Advertisment

க்ரெயான் முதல் பீல் ஆஃப் வரை.. யாருக்கு எந்த லிப்ஸ்டிக் பெஸ்ட்?

நீண்ட நேரம் நீடித்து இருக்கும் லிப்ஸ்டிக் வகை எது? லிப்ஸ்டிக்கை சரியாக எப்படி அப்ளை செய்யத் தெரியாதவர்களுக்கு ஏதாவது ஆப்ஷன் இருக்கிறதா? இதுபோன்ற சந்தேகங்களுக்கான விளக்கங்களை பார்ப்போம்

author-image
priya ghana
New Update
Types of lipstick beauty tips tamil news

Types of lipstick beauty tips

Types of Lipstick Tamil News: முகத்தை அலங்கரிக்க பவுடர், ஃபவுண்டேஷன், மஸ்காரா, லைனர், காஜல் உள்ளிட்ட இத்தனை மேக்-அப் பொருள்கள் தேவையே இல்லை. ஒரேயொரு 'லிப்ஸ்டிக்' போதும். சட்டென 'பளிச்' முகம் ரெடி. ஆனால், க்ரெயான், க்ரீம், க்ளிட்டர் (Glitter), க்லாஸ் (Gloss) என ஏராளமான லிப்ஸ்டிக் வகைகள் மார்க்கெட்டில் உள்ளன. அவற்றில் எதனைத் தேர்வு செய்வது என்பதில் பலருக்குப் பல சந்தேகங்கள் எழும்.

Advertisment

நீண்ட நேரம் நீடித்து இருக்கும் லிப்ஸ்டிக் வகை எது? லிப்ஸ்டிக்கை சரியாக எப்படி அப்ளை செய்யத் தெரியாதவர்களுக்கு ஏதாவது ஆப்ஷன் இருக்கிறதா? உதடுகள் வறண்டு போகாமல் இருக்க என்ன வகையான லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வது? என இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் மனதில் எழும். இதுபோன்ற சந்தேகங்களுக்கான விளக்கங்களை இனி பார்ப்போம்.

க்ரெயான்(Crayon)

உங்கள் உதடுகள் ஹயிலைட்டாக தெரியவேண்டும் என்றால் க்ரெயான் வகை லிப்ஸ்டிக் சிறந்த தேர்வு. பிரைட் வண்ணங்களில் அதிகம் கிடைக்கும் இந்த வகை லிப்ஸ்டிக், நாள் முழுவதும் அழியாமல் இருக்கும். சிலருக்கு உதடுகள் வறண்ட நிலையிலேயே இருக்கும். அவர்களுக்கு இந்த க்ரெயான் லிப்ஸ்டிக் சரியான தேர்வு இல்லை. வேண்டுமென்றால் முதலில் 'லிப் பால்ம்' அப்ளை செய்து, அதன்மேல் க்ரெயான் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேட், க்ரீம் போன்ற ஃபினீஷ்களிலும் க்ரெயான் லிப்ஸ்டிக் கிடைக்கும்.

க்ரீம்(Cream)

குளிர்காலங்களில் உபயோகிக்க ஏற்ற லிப்ஸ்டிக் வகை இந்த க்ரீம். இதில் எண்ணெய்த்தன்மை அதிகம் இருப்பதால் லிப் பால்ம் போன்றவை இதனோடு சேர்த்து உபயோகிக்க அவசியமில்லை. இதில், கிளாஸி மற்றும் மேட் வகை லிப்ஸ்டிக்குகள் கலந்து இருக்கின்றன. கோடைக்காலங்களில் உபயோகிக்கும்போது, அதிகப்படியான எண்ணெய் தன்மையால் உருகி வழிவதற்கு வாய்ப்பிருக்கிறது.

Types of Lipsticks Tamil news Types of Lipsticks

கிளாஸி(Glossy)

பளபளப்புத்தன்மை கொடுக்கும் லூமினஸ் ஃபேக்டர் (luminous factor) இந்த லிப்ஸ்டிக்கில் அதிகம் உள்ளதால், கிளாஸி லிப்ஸ்டிக் வகை மினுமினுப்புடனும் ஈர்ப்பத்துடனும் இருக்கும். மெல்லிய உதடு கொண்டிருப்பவர்களுக்கு இந்த வகை லிப்ஸ்டிக் பக்கா தேர்வு. ஸ்டிக் மற்றும் திரவ வடிவில் இந்த கிளாஸி லிப்ஸ்டிக் கிடைக்கும்.  ஆனால், இந்த வகை லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதட்டில் படிந்து இருக்காது. அதற்குக் காரணம் அதன் உருகும் தன்மை. நீண்டநேரம் வேண்டுமென்றால் 3 முதல் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உதடுகளை நன்கு சுத்தம் செய்துவிட்டு, கிளாஸி லிப்ஸ்டிக்கை அப்ளை செய்துகொள்வதுதான் ஒரே வழி. வறண்ட உதடுகளுக்கு இதுபோன்ற லிப்ஸ்டிக் வகை சிறந்தது.

மேட் ஃபினிஷ் (Matt finish)

கிளாஸி போன்ற மின்மினுக்கும் லிப்ஸ்டிக் வகை விரும்பாதவர்களுக்கு நிச்சயம் மேட் ஃபினிஷ் வகை சரியானதாக இருக்கும். அடர்ந்த நிறங்களில் கிடைக்கக்கூடிய இதுபோன்ற லிப்ஸ்டிக் வகைகள் மற்ற லிப்ஸ்டிக்குகளை விட நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். லிப் லைனர் போட்டு உதடுகளை மேலும் ஹயிலைட்டாக்கலாம். வறண்ட உதடுகள் உடையவர்கள் லிப் பால்ம் அப்ளை செய்து அதன்மேல் மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

பீல்-ஆஃப் (Peel-Off)

லிப்ஸ்டிக் போடுவது மிகப்பெரிய டாஸ்க் என்று மலைப்பாக நினைப்பவர்களுக்கு பீல்-ஆஃப் கைகொடுக்கும். இதுதான் தற்போதைய ட்ரெண்டும்கூட. 'ஜெல்' வடிவில் இருக்கும் இந்த லிப்ஸ்டிக்கை உதட்டில் அப்ளை  செய்து, காய்ந்த பிறகு உதடுகளிலிருந்து பிரித்து எடுத்தால், வண்ணமயமான உதடுகள் ரெடி. உதட்டைத் தாண்டி வெளியில் எங்கேயும் ஒட்டியிருக்காது. மேலும், உதட்டோடு ஒட்டியிருப்பதால், தனியாக லிப்ஸ்டிக் போட்டிருப்பதைப்போல் உணரமாட்டீர்கள். அதுமட்டுமின்றி, இது நீண்ட நேரம் நீடித்தும் உழைக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Beauty Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment