இந்த இரண்டையும் செய்வது மிகவும் ஈசி. மேலும் சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 டம்ளர் உளுந்து
5 சின்ன வெங்காயம்
இஞ்சி நறுக்கியது
கருவேப்பிலை ஒரு கொத்து
6 பச்சை மிளகாய் நறுக்கியது
உப்பு
2 ஸ்பூன் பச்சரிசி மாவு
பொறிக்கும் அளவு எண்ணெய்
சட்னி தேவையான பொருட்கள்
10 சின்ன வெங்காயம்
சிறிய அளவு புளி
3 வர மிளகாய்
கொஞ்சம் கருவேப்பிலை
உப்பு
செய்முறை: உளுந்தை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்துகொள்ளவும்.அரைத்த மாவில் சின்ன வெங்காயம் நறுக்கியது, இஞ்சி நறுக்கியது, கருவேப்பிலை, மிளகாய் நறுக்கியது, உப்பு, பச்சரிசி மாவை சேர்த்து கிளரவும். சிறிய அளவில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். எண்ணெய் கொதித்ததும், அதில் சிறிய போண்டா போல் போட்டு பொறித்து எடுக்கவும்.
சட்னி செய்முறை : ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம், புளி, உப்பு, கருவெப்பிலை, வத்தல், தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும்.