Advertisment

சென்னையில் மனித நேயம்: வீடு அற்றவர்களின் இறப்புக்கு மரியாதை செலுத்தும் 'உறவுகள்'

'உறவுகள் ட்ரஸ்டில்' 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர், பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

author-image
WebDesk
New Update
சென்னையில் மனித நேயம்: வீடு அற்றவர்களின் இறப்புக்கு மரியாதை செலுத்தும் 'உறவுகள்'

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் சுமார் 10 இளைஞர்கள் ஒன்று கூடி தெருக்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்காக உதவி செய்ய முயற்சி மேற்கொண்டார்கள். ஆதரவற்றவர்களுக்கு மிகவும் அவசியமான தேவை என்ன என்பதை கண்டுபுடித்து அவர்களுக்கு உதவி செய்யும் பணியை ஆரம்பிக்க தொடங்கினர்.

Advertisment

பலருடன் கலந்தாலோசித்த பிறகு, தெருக்களில் வாழும் மக்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று அவர்கள் இறந்த பிறகு அவர்களை யார் புதைப்பார்கள் என்னும் அவர்களின் கேள்வியை உணர்ந்து; அவற்றிற்கு உதவவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

publive-image

2017 ஆம் ஆண்டில், 'உறவுகள்' என்ற பெயரில் தன்னார்வு தொண்டு நிறுவனத்தை இளைஞர்கள் நிறுவினார்கள். இதன் மூலம் வீடற்ற மற்றும் கைவிடப்பட்டவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் அடக்கம் / தகனத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்தின் மூலம் பணிபுரிந்தார்கள்.

'உறவுகள்' தன்னார்வ நிறுவனத்தின் தலைவரான காலித் அஹமட் கூறுகையில், "குடும்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பும் இந்த அமைப்பை உருவாக்க ஊக்குவித்தது. 'உறவுகள்' நிறுவிய ஆரம்பத்தில், பலரிடம் உரையாடி தங்களது பணிகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தினர். சுவரொட்டிகள் மூலம் தங்களது பணிகளை காவல்துறைக்கு தெரிவித்து உதவ முயற்சித்தனர்.

சில நாட்களுக்கு பின்பு, தெருவில் வாசித்த ஒரு நபரின் மரணத்திற்கு பின் இவர்களின் பணி துவங்கியது. முதலில், போலீசார் விசாரணை நடத்தி, அடையாளம் தெரியாத சடலத்தின் உறவினர்களை கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். சுமார் 30 நாட்களுக்குப் பிறகு பல முறையான நடைமுறைகள் மேற்கொண்டும், உடல் உரிமை கோரப்படவில்லை என்றால், 'உறவுகள் ட்ரஸ்ட்' வந்து, உடலை அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.

“ஒருவன் இறந்த பிறகு உடலைச் சுமக்க நான்கு பேர் இருந்தால், அவர் பணக்காரர். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இது நமது கடமை” என்கிறார் நிறுவனர்.

இந்த ட்ரஸ்டின் தலைமையகம் சென்னையில் உள்ளது, மேலும் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படுகிறது. இது இப்போது 500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

இந்த அமைப்பு பல கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு அமர்வுகளையும் நடத்துகிறது என்கிறார் அகமது. இதைச் செய்யும்போது, ​​​​பல இளைஞர்கள் வருகைதந்து, தன்னார்வத்துடன் இந்த காரணத்தை ஆதரிக்க விரும்புகின்றனர் என்று அவர் கூறுகிறார்.

இந்த விழிப்புணர்வு அமர்வுகளில் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது மட்டுமல்லாமல், தற்கொலையைத் தடுப்பது எப்படி போன்றவையும் கற்பிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட 500க்கும் மேற்பட்டோரை தான் கவனித்து வந்ததாக அகமது கூறுகிறார்.

'உறவுகள்' தன்னார்வ நிறுவனத்தின் கீழ் 'அன்புக்கு கைகொடுப்போம்' என்ற ஒரு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் கீழ் பணிபுரியும் குழு பல முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.

சராசரியாக, குழு ஒரு நாளைக்கு 10 முதல் 20 சடலங்களை அடக்கம் செய்கிறது. இந்த ஆண்டு நவம்பரில், 169 பேரின் சடலங்களை அடக்கம் செய்ததாக அஹமட் கூறுகிறார். கொரோனா பெருந்தொற்று காலங்களில் 1,500க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்ததாக கூறுகின்றனர்.

“2017 முதல், இல்லை என்ற வார்த்தை எங்களிடமிருந்து வந்ததில்லை. இந்த ட்ரஸ்ட் தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளது. சில சமயங்களில் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்கிறார் அகமது. நாங்கள் சொந்தமாக வாகனங்களை ஏற்பாடு செய்து இந்த பணிகளை மேற்கொள்கிறோம், ”என்று அவர் கூறுகிறார்.

"நாங்கள் இக்கட்டான நிதி சூழ்நிலையில் இருக்கும்போது, எங்கள் குழு உறுப்பினர்கள் நிறுவனத்தை நடத்துவதற்கு போதுமான பணம் இருப்பதை உறுதி செய்ய நகைகளை அடகு வைப்பார்கள்", என்று அவர் மேலும் கூறினார்.

எதிர்காலத்தைப் பற்றி கேட்டபோது, ​​அஹமட் கூறுகிறார், “எதிர்காலத்தில் இந்த சேவைகள் தொடரும் என்று நாங்கள் கூற முடியாது, ஏனென்றால் இவை நடக்கக்கூடாது என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, யாரும் கைவிடப்பட்டவர்களாக பிறப்பதில்லை" என்று கூறினார்.

Tamil Nadu Chennai Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment