vada curry recipe vada curry in tamil : இட்லி மற்றும் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் வடகறி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளுக்குப் பொருத்தமாக இருக்கும் வடகறியை எளிதில் விரைவாகவும் சுவையாகவும் செய்து அசத்தலாம்.
Advertisment
கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் மிக்ஸியில் கடலைப் பருப்பைச் சேர்த்து, சீரகம், சோம்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கர கரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை வடைபோல் தட்டிக் கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும். தற்போது வடைகளை உடைத்துக்கொள்ளுங்கள். தனியாக வைத்துவிடுங்கள்.
vada curry recipe : செய்முறை!
* தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கடலைப் பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி வதக்கவும்.
* அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
* நன்றாக கொதிக்கும் போது தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
* திக்கான பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள வடைகளை போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil