உங்கள் மனதுக்கு பிடித்தவரிடம், உங்கள் அன்பை வெளிப்படுத்த ஒரு நாள் அல்லது ஒரு வாரம் கூட போதாது என்றாலும், இந்த ’காதலர் வாரம்’ அனைவருக்கும் தங்கள் துணைகளை சிறப்புடன் உணரவும் அன்பின் அழகில் திளைக்கவும் ஒரு சரியான வாய்ப்பை வழங்குகிறது. இந்தக் காதலர் வாரத்தில், உங்கள் துணையுடன் காதல் நிறைந்த இடத்திற்குச் சென்று, வரவிருக்கும் நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பல உணர்வுகள் நிறைந்த காதலர் வாரத்தில், வட இந்தியாவில் உங்கள் துணையுடன் சென்று நீங்கள் ரசிக்க வேண்டிய ஏராளமான இடங்கள் உள்ளன. எங்கு திரும்பினாலும் பனிமூட்டம், பச்சை பசேலென்ற காடுகள், ரம்மியமாய் ஆர்ப்பரிக்கும் அருவிகள், அழகிய காபி, தேயிலை தோட்டங்கள் என இந்த இடங்கள் பார்த்த உடனே உங்கள் மனைதை கொள்ளை கொள்ளும்.
ஜிம் கார்பெட், உத்தரகாண்ட்

நீங்கள் வேடிக்கை நிறைந்த வைல்ட் லைஃப் அட்வன்சர் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான இடம்! ஜீப் சஃபாரி ஜிம் கார்பெட்டில் அனுபவிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது, குறிப்பாக நீங்கள் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபியில் ஆர்வம் கொண்டவராகவும், விலங்குகளை விரும்புபவராகவும் இருந்தால்.
இந்த திறந்த ஜீப் சவாரி உண்மையிலேயே மாயாஜாலமானது. அதுமட்டுமின்றி, வல்லுனர்களின் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் யானை சவாரியையும் மேற்கொள்ளலாம். ஜிம் கார்பெட்டின் கொஞ்சும் இயற்கை எழிலுடன், இந்த சவாரி வியக்க வைக்கிறது. நீங்கள் சாகச விளையாட்டுகளைத் தேடுகிறீர்களா? ஆம் எனில், ரிவர் ராஃப்டிங் மற்றும் ரிவர் கிராசிங் ஆகியவை ஜிம் கார்பெட்டில் மிகவும் பிரபலம் ஆகும்.
ஜெய்சல்மர், ராஜஸ்தான்

உண்மையான பாலைவன அனுபவத்திற்கு, ராஜஸ்தானின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றான ஜெய்சால்மரைப் பார்வையிடவும். இந்து தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிக அழகிய ஏரிகளில் ஒன்றான காடிசர் ஏரியில், படகு சவாரி செய்வது போன்ற அற்புதமான காதல் அனுபவங்கள் இங்கு நிறைந்துள்ளன.
தார் பாலைவனத்தின் வழியாக ஒட்டகச் சவாரி செய்யலாம், சாகச ஆர்வலர்கள் டூன் பைக்கிங்க் செல்லலாம். நீங்கள் வரலாற்றில் ஆர்வமாக இருந்தால், மாநிலத்தின் இரண்டாவது பழமையான கோட்டையான ஜெய்சல்மர் கோட்டையை பார்வையிடலாம்.
சிம்லா, இமாச்சல பிரதேசம்

சிம்லா அதன் அழகிய காட்சிகளுக்காக அறியப்படுகிறது, இது மிகவும் விரும்பப்படும் பயண இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் அற்புதமான காலனித்துவ கட்டிடக்கலை மற்றும் அழகான இடங்களைக் கொண்டுள்ளது. சாகச நடவடிக்கைகளில் ஆர்வமுள்ளவர்கள் ஐஸ் ஸ்கேட்டிங், ஸ்கையிங், ரிவர் ராஃப்டிங் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.
நீங்கள் நகரத்தின் சலசலப்பில் இருந்து விலகி, தரமான நேரத்தைச் செலவிட விரும்பினால், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்காக அறியப்பட்ட சைல் மலையில் மலையேற்றம் மற்றும் கேம்பிங் செல்லலாம்.
நைனிடால், உத்தரகாண்ட்

நைனிடால் இந்தியாவின் மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். மறக்கமுடியாத சவாரிக்கு நைனி ஏரி வழியாக படகில் செல்லலாம். டிஃபின் டாப் (Tiffin Top) உங்களுக்கு அழகான சூரிய உதயம் அனுபவத்தை வழங்கும். உங்கள் அன்பான மற்றவர்களுக்கு சில பரிசுகளை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் திபெத்திய சந்தை மற்றும் மால் சாலையில் ஷாப்பிங் செய்யலாம்.
முசோரி, உத்தரகண்ட்

ஆர்ப்பரித்து விழும் நீர்வீழ்ச்சிகள், வானுயர்ந்த மலைகள் என வசீகரிக்கும் நிலப்பரப்புகள் நிறைந்த முசோரி ஒரு காதல் சொர்க்கமாகும். நீங்கள் ஒரு சாகச ஜோடியாக இருந்தால், இங்கு கெம்ப்டி நீர்வீழ்ச்சி அவசியம் பார்க்க வேண்டிய இடம். மறுபுறம், நீங்கள் அமைதியான ஒன்றைத் தேடுகிறீர்களானால், ஜூலா கர் முதல் கன் ஹில் வரையிலான கேபிள் கார் பயணத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.
ரொமான்டிக் லஞ்ச் தேடுகிறீர்களா? ராபர்ஸ் கேவ், சரியான சுற்றுலாத் தளமாகும். மேலும் கிளவுட்ஸ் எண்டில் சூரிய அஸ்தமனம் பார்க்கலாம், இது ஒரு சர்ரியல் அனுபவமாக இருக்கும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“