சுவையான புதுவிதமான வாழைக்காய் புட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாழைக்காயை கழுவி சுத்தம் செய்து ஓரங்களை நறுக்கிக் கொள்ளவும். பின் பாதியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
பின் தண்ணீரை வடித்து ஒரு தட்டில் வைத்து ஆறவைத்து தோலை உரித்துக் கொள்ளவும். பின் கேரட் துருவியில் வைத்து பொடியாக துருவிக் கொள்ளவும். வாழைக்காய் துருவலோடு தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கலந்து வைத்துள்ள வாழைக்காய் துருவலை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான வாழைக்காய் புட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“