கேரள மாநிலம் திருச்சூர் தான் எங்களோட சொந்த ஊரு, ஆனா இப்போ எங்களுக்கு எல்லாமே ஊருதான்.
இந்தியா மட்டுமில்ல நேபால், சீனா எல்லை, புட்டான் எல்லை, மியான்மர் எல்லை இப்படி எல்லா இடத்துலயும் இந்த வேன்ல நாங்க பயணம் செய்ஞ்சுருக்கோம். ஒது ஒரு வித்தியாசமான அனுபவம்.
சின்ன வயசுல இருந்தே எனக்கு பயணம் செய்யணும் ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா என்னோட அம்மா, அப்பா கண்டிப்பா இருப்பாங்க. அதனால எனக்கு பிடிச்சதை என்னால செய்யவே முடியல. ஆனாலும் ஒரு பொண்ணா இருந்து என்னால பயணம் செய்ய முடியும்னு நான் நம்பவே இல்ல. அது எல்லாமே மாறுனது அகில் பார்தத்துக்கு அப்புறம் தான்.
அகில் தான் எனக்கு அந்த தைரியத்தை கொடுத்தது.
இப்போ நாங்க இந்த மாதிரி ஒரு வேன்ல இந்தியா முழுக்க பயணிச்சுட்டு இருக்கோம் என்கிறார் மனநல மருத்துவராக இருக்கும் ஷம்ஷியா…
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
”நான் ஒரு ஆட்டோமொபைல் என்ஞ்சினியர். படிச்சு முடிச்ச உடனே நான் கத்தார்க்கு வேலைக்கு போயிட்டேன், ஆனா அந்த வேலை எனக்கு மனநிறைவா இல்ல. அதனால நான் அந்த வேலையை விட்டு மறுபடியும் இங்கே வந்துட்டேன்.
மினிமலிஸ்டிக்கா எப்படி வாழ முடியும், இதுதான் இப்போ எங்க பயணத்தோட மெசேஜ்.
எல்லாரும் அப்படி வாழ முடியாது. ஆர்வம் இருந்தா மட்டும் தான் முடியும். எங்களுக்கு கட்டுக்கடங்காத ஆர்வம் இருக்கு, என்கிறார், சுற்றுலா வழிகாட்டி அகில்…..
கதவை திறந்த உடனே பெட்ரூம். இது ஃபோல்டபிள். அதனால நமக்கு தேவைப்படுற நேரம் உள்ளே இருக்க இடத்தை யூஸ் பண்ணிக்கலாம்…
கார் மேல சோலார் பேனல் இருக்கு, எங்களுக்கு தேவைப்படுற கரண்ட் எல்லாம் நாங்க இந்த சோலார் பேனல்ல இருந்து எடுத்துக்கிறோம்.
ஒரு பொண்ணாகவும், ஒரு தம்பதி ஆகவும் பயணம் செய்யும் போது பாக்கிறவங்களுக்கு ஜாலியா இருக்கும். அகில் பொறுத்தவரைக்கும் நிறைய சவால் இருக்கு… என்னோட பாதுகாப்பு பாக்க வேண்டியிருக்கு. அதுக்கூட சுத்தம். நம்ம பப்ளிக் டாய்லெட்ஸ் எல்லாம் யூஸ் பண்ண வேண்டியிருக்கு.
அந்த நேரம் நாம அதை சானிடைஸ் பண்ணனும். அந்தமாதிரி நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு.
அதோட இந்த பயணத்துல சாப்பாடு எல்லாமே சமைச்சு தான் சாப்பிடுறோம். அதுக்கு ஏத்தமாதிரி ஒரு இடம் கிடைக்கணும். இதெல்லாம் கொஞ்சம் சவாலா இருக்கும். நமக்கு இது ரொம்ப பிடிச்சா, நம்மளால பண்ண முடியும். அதுதான் நாங்க இதுல நிருபிச்சு இருக்கோம்.
கோவிட்ல எங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. அந்த நேரம் அகிலோட பிஸ்னெஸ் ரொம்ப டல்லா இருந்தது. இதுக்கான ஆரம்ப முதலீடு கொஞ்சம் அதிகம் தான்.. இந்த மாதிரி ஒரு வண்டி வேணும், அதை ஒரு மோட்டார்ஹோம் நாம மாத்தணும்.
என்கிட்ட இருந்த தங்கநகைய கொஞ்சம் வித்துட்டோம். அதுல இருந்து கிடைச்ச பணத்துல இருந்துதான் இதை நாங்க ஆரம்பிச்சோம்..
இங்க இருந்து லண்டன் போறதுதான் எங்களோட எதிர்கால திட்டம். இதுதான் எங்களோட கனவு, உலகம் முழுக்க சுத்தணும் கனவு இருக்கு. அதுக்காக இப்போ நாங்க நிறைய ஸ்பான்சர்ஷிப் பாத்துட்டு இருக்கோம், என்கிறார் ஷம்ஷியா….
இதுபோன்ற பயணங்களை செய்ய விரும்புகிறவர்களுக்கான ஒரு இணையதளத்தையும் இவர்கள் தொடங்கி இருக்கின்றனர்.
ஷம்ஷியா ஆன்லைன் வழியாக பணி செய்து வருகிறார். இதிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து தான் இவர்கள் இந்த பயணத்திற்கான செலவுகளை மேற்கொள்கிறார்கள்.
நாங்க பயணம் செய்றதை நாங்க என்ஜாய் பண்றோம். ஆனா அதை நீண்ட காலத்துக்கு எடுத்துட்டு போகும் போது, அதுல ஒரு குறிக்கோள் இருக்கணும். அந்த குறிக்கோளை அடையறதுக்காக தான் SAVE (Save a Voice of Everyone) என்.ஜி.ஓ நாங்க ஆரம்பிசோம்.
பயணம் செய்யணும் ஆசை இருக்கிறவங்களுக்கு எங்களால முடிஞ்ச அளவுக்கு அவுங்களை கூட்டிட்டு போவோம்.
இந்த ஆம்னி வேன் ஒரு 800 சிசி தான். உலகம் முழுக்க இந்த வண்டியில இந்த மினிமலிஸ்டிக் வழியில பயணம் செய்யணும். இதுதான் எங்களோட ஆசை, என்று கண்களில் கனவுடன் முடிக்கிறார் அகில்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.