சின்னத்திரையில் சத்யாவாக நடித்து நம்மை கட்டிப்போட்ட வாணி போஜன், இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார். வாணி போஜன், சமூக ஊடகங்களிலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார். சமீபத்தில் தனுஷ்கோடிக்கு சென்ற போது எடுத்த படங்களை வாணி போஜன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ராமேஸ்வரம் தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ள தனுஷ்கோடி, இலங்கையிலிருந்து (18 மைல்) இந்தியாவின் மிக அருகில் உள்ள நிலப்பரப்பாகும். நீண்ட தரிசு மணல், சில பாழடைந்த கட்டிடங்கள், ஒரு சிறிய கோவில் மற்றும் முடிவில்லாத பெருங்கடல் உடன் இருக்கும் இந்த இடம், ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒரு செழிப்பான நகரமாகும்.
தனுஷ்கோடி வழக்கமான வார விடுமுறைக்கு ஏற்ற இடம் அல்ல. இங்கு ‘சுற்றிப் பார்க்கும்’ இடங்கள் அல்லது ஷாப்பிங் மற்றும் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இது ஒரு செழிப்பான நகரத்தின் மணல் கல்லறை. நேரம் மற்றும் இடம் பற்றிய உணர்வு ஒன்றுமில்லாமல் மூழ்கிய இடம்தான் தனுஷ்கோடி.
வாணி போஜன் தனுஷ்கோடி கிளிக்ஸ்







எப்படி செல்வது: ராமேஸ்வரத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள தனியார் ஆட்டோக்கள் மற்றும் வண்டிகள்’ சாலை முடியும் இடத்தில் உள்ள கடற்படைச் சாவடிக்கு உங்களை அழைத்துச் செல்லும். இங்கிருந்து 4 வீல் டிரைவ் கொண்ட மினிவேன் அல்லது கமாண்டர் ஜீப்பை வாடகைக்கு எடுக்க வேண்டும். சவாரி மிகவும் கடினமானதாகவும் சமதளமற்றதாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“