வாணி போஜன், இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார். சமூக ஊடகங்களிலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.
வாணி போஜன், சமீபத்தில் கருப்பு நிற ஜியோமெட்ரிக்ஸ் டிசைன் கொண்ட ஐகாட் புடவை, அதற்கு மேட்சிங் ஆக வெள்ளை நிற பஃப் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் அணிந்து எடுத்த போட்டோஷூட்டை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க!
இந்த ஐகாட் புடவையில் என்ன ஸ்பெஷல்?
ஐகாட் புடவைகள் ’ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பத்தை’ அடிப்படையாகக் கொண்டது. அதாவது புடவையில் நாம் விரும்பும் டிஸைன்களைக் கொண்டு வரும் முன் சாயமேற்றும் வேலை நடைபெறும். அப்படிச் சாயமேற்றும் போது பழைய முறைப்படி நாம் விரும்பும் இடங்களில் மட்டும் ஸ்பெஷல் மோடிஃப்கள் மூலம் அழகான டிஸைன்களை நெசவு செய்வதற்கு ஒதுக்கிக் கொண்டு முந்தானைப் பகுதியிலோ அல்லது உடல்பகுதியிலோ மீதமுள்ள இடங்களில் சாயம் பரவும் வகையில் சாயமேற்றும் முறைக்கு ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பம் என்று பெயர்.
இந்த வகை சாயமேற்றும் தொழில்நுட்பம் புடவையின் வார்ஃப் களில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வார்ஃப் ஐகாட்’ என்றும், வெஃப்டில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வெஃப்ட் ஐகாட்’ என்றும் கூறப்படுகிறது.
சில சமயங்களில் வார்ஃப், வெஃப்ட் இரண்டிலுமே இந்த வகை ரெஸிஸ்ட் டையிங் முறை பயன்படுத்தப் பட்டிருந்தால் அதற்கு ’டபுள் ஐகாட்’ என்று பெயர்.
இந்த வகைப் புடவைகளில் தனித்துவமாக பெருமை சேர்ப்பவை புடவைகளின் பளீரிடும் வண்ணங்களும் அவற்றில் பயன்படுத்தப்படும் ஜியோமெட்ரிக்கல் டிஸைன்களும் தான்.
ஜியோமெட்ரிகலை அடிப்படையாகக் கொண்ட டிஸைன்களில் உண்டாக்கப்பட்ட பூக்கள், இலைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்களை ஐகாட் புடவையில் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அந்த நெசவாளர்களுக்கு நெசவுக்கலை மீதான துல்லியமான அறிவும், தனித்திறமையும் தேவை.
அதனால் தான் இந்த சேலைகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
.