பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமாரின் மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு வனிதாவுக்கு, தற்போது சினிமாவிலும், சின்னத்திரையிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் குக் வித் கோமாளி வெற்றிக்கு பிறகு தனது சமையல் திறமையை உலகுக்கு காட்டும் வகையில் வனிதா விஜயகுமார் என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் தான் சமைக்கும் உணவுகளை வீடியோ எடுத்து பதிவேற்றி வந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.




ஜோவிகா ஃபிரென்ட் பிறந்தநாளை முன்னிட்டு, வனிதா ஜோவிகா நண்பர்களை இ.சி.ஆர்.க்கு அழைத்து சென்று ட்ரீட் கொடுத்தார். பிறகு அனைவரும் ஐஸ்கிரீம் ஷாப்க்கு சென்று அங்கு விரும்பிய ஐஸ்கீரிமை வாங்கி சுவைக்கம், வனிதா பீடா ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டார்.
இந்த வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“