வரலட்சுமி, சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டகோழி 2, சர்கார், மாரி 2 எனப் பல படங்களில் சவாலான வேடங்களில் நடித்து’ தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
வரலட்சுமி, தனது 38வது பிறந்தநாளை கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
Save Shakthi இயக்கம் குறித்து ரசிகையின் கேள்விக்கு பதிலளித்த வரலட்சுமி, ’ஒரு டி.வி. சேனல் ஹெட் எங்க வீட்டுக்கு ஒரு ஷோ பத்தி பேச வந்தாங்க. பேசி முடிச்ச பிறகு, மத்த விஷயங்களுக்கு எப்போ மீட் பண்ணலாம் கேட்டாங்க. நான், என்ன சொல்றீங்க, எனக்கு புரியலன்னு கேட்டேன். இதை நான் என் ஃபிரென்ட்ஸ்கிட்ட சொல்லும் போது நீ எப்படி அவனை அடிக்காம விட்டன்னு கேட்டாங்க, பொதுவா இப்படி யாரு பேசுனாலும் நான் அவுங்கள பளார்ன்னு அறைஞ்சிருவேன். ஆனா, நான் அப்போ என்ன யோசிச்சேன்னா, எனக்கு ஃபேமில பேக்ரவுண்ட் இருக்கு, அவன் என் வீட்டுக்கு வந்து என்கிட்டயே இந்த மாதிரி கேள்வி கேட்குறான்னா, மத்த பெண்கள் கிட்ட அவன் என்னமாதிரி கேட்டுக்கிட்டு இருப்பான் யோசிச்சேன்.
அப்போ நான், அவுங்கள நீங்க கிளம்புறது நல்லதுன்னு சொன்னேன். ஆனா, அவன் இப்போ நீங்க பேட் மூட்ல இருக்கீங்க, நான் அப்புறமா வரேன்னு சொன்னான்.
அப்போதான் நான் இதுபத்தி நிறைய யோசிச்சேன். பொதுவா பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தொடர்ந்த வழக்கு, வருஷக்கணக்குல போகுது. இது எப்படி குறைக்கலாம். தமிழ்நாட்டுல மொத்தம் 33 மாவட்டங்கள் இருக்கு. ஒவ்வொரு மாவட்டத்துலயும் ஒரு மகிளா கோர்ட் இருக்கணும். ஆனா, தமிழ்நாட்டுல மொத்தமே 4 மகிளா கோர்ட் தான் இருக்கு.
மகிளா கோர்ட், ஃபாஸ்ட் டிராக் கோர்ட்ஸ் ஆரம்பிச்சாலே தீர்ப்பு கொஞ்சம் சீக்கிரம் கிடைக்கும். இந்த விஷயத்தை கையில எடுத்துட்டு பெட்டிஷன் போட்டோம். பிரச்சாரம் பண்ணோம். 3 லட்சம் மேல மக்கள் வந்து இதுல கையெழுத்து போட்டாங்க. இதை எடுத்துட்டு டெல்லிக்கு போயி, சட்டத்துறை அமைச்சரை சந்திச்சோம். அவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைஞ்சாரு.
நாட்டுல மகிளா கோர்ட் கொண்டுவர, பட்ஜெட்ல 333 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு. ஆனா எல்லா மாவட்டத்துலயும் இது இல்ல. அமைச்சர் இதெல்லாம் கேட்டு, எங்க முன்னாடியே, எல்லா மாவட்டத்துலயும் மகிளா கோர்ட் இருக்கிறதை உறுதி செய்யும் படி ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் கடிதம் அனுப்புனாங்க.
Save Shakthi இயக்கத்துக்கு பின்னாடி இருக்கிற காரணம் இதுதான். ஆனா, இன்னைக்கு இந்த இயக்கம் பெண்களை மட்டுமல்ல, விலங்குங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பல்வேறு வகையில பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாவும் இருக்கு, என்றார்.
பிறகு ஒரு ரசிகர், நீங்கள் பிறக்கும் போதே பணக்கார குழந்தையா இருந்தாலும், சிலருக்கு கொஞ்சம் பண கஷ்டம் வரும். அப்படி நீங்க ஏதாவது கஷ்டங்களை அனுபவிச்சேங்களா என்று கேட்டார்.
அதற்கு வரலட்சுமி, நான் பிறக்கும் போதே பணக்கார குழந்தையா பிறக்கல, என் அப்பா ஒரு ஜர்னலிஸ்ட். நாங்களும் 3 வேளைக்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு தான் மேல வந்தோம். என்னோட 10 வயசு வரைக்கும் அப்பாவோட படம் ஹிட் ஆகல, அவர் போராடிட்டு தான் இருந்தாரு. அதுவரைக்குமே நான் நடந்துதான் ஸ்கூல் போனோம்.
என் வாழ்க்கையில நான் ஓரு கட்டத்துல அப்பா, அம்மாகிட்ட இருந்து காசு வாங்கிறத நிப்பாட்டுனேன்.எனக்கு கல்விக்கு மட்டும் தான் செலவு பண்ணாங்க, ஒரு நடனக்குழுல சேர்ந்து, யுனிவெர்சல் ஸ்டோர் ஒப்பனிங்ல ரோட்டுல ஆடி 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குனேன். அதுதான் என்னோட முதல் சம்பளம். அங்கதான் நான் என் வாழ்க்கைய ஆரம்பிச்சேன், என்று கூறினார் வரலட்சுமி.
பிறகு ஒரு ரசிகை, உங்க பின்னாடி ஒரு டாட்டூ இருக்கு. அதுக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த வரலட்சுமி, அது ஒரு பெண் டிராகன். அந்த டிராகன் வயித்துல ஒரு சிம்பிள் இருக்கு. எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும், எல்லா நல்லதுலயும் ஒரு கெட்டது இருக்கும், அதான் அதோட அர்த்தம். மொத்தம் 11 டாட்டூ போட்டிருக்கேன்.
கை மணிக்கட்டுல போட்டிருக்க டாட்டூ ஷேக்ஸ்பியரோட காமெடி அண்ட் ட்ரெஜெடி மாஸ்க். எனக்கு சினிமா பிடிக்கும், அதனால இதுல ஃபிலிம் ஸ்ட்ரிப் இருக்கும், அப்புறம் நாய்க்குட்டி இறந்தபோது, ஒரு Paw டாட்டூ போட்டேன். நான் ஃபெமினிஸ்ட் அதனால ஃபீமேல் சிம்பிள் வச்சு ஒரு டாட்டூ போட்டுருக்கேன். நான் ஒரு டான்சர், மியூசிஷியன். அதனால அந்த டாட்டூவும் போட்டுருக்கேன் .
இப்படி பல விஷயங்களை வரலட்சுமி கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோ பாருங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.