கலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும் பாட்டி!

இந்த தள்ளாடும் வயதிலும், பலருக்கும் உதவிக்கரமாக வாழும் பாட்டியின் சேவை பாராட்டுதலுக்கும் மேலானது.

சில நேரங்களில் நாம் யதர்ச்சியாக சந்திக்கும் சில நபர்கள் நமது நினைவில் நீங்கா இடத்தை பிடித்துவிடுகின்றனர். அதிலும் தள்ளாடும் வயதில் சில முதியவர்கள் செய்யும் செயல்கள் அவ்வளவு எளிதாக நமது கண்களை விட்டு அகலாது. அப்படி ஒரு பாட்டி தான் இரண்டு நாட்களாக இணையத்தை கலக்கி வருகிறார்.

மத்திய பிரதேசத்தின் கலெக்டர் ஆபிஸ் முன்பு இருக்கும் ஒரு சிறிய குடிசையில் பெரிய சைஸ் டைப்ரைடிங் மிஷினை போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். காலை முதல் மாலை வரை யாரெல்லாம் கலெக்டர் ஆபிஸுக்கு புகார மனுக்கள் , கடிதங்களை தர வருகிறார்களோ, அவர்கள் எல்லோருக்கும் இந்தியில் டைப் ரைடிங் மிஷினில் வைத்து அடித்து கொடுப்பது தான் இந்த பாட்டியின் வேலை.

குறிப்பாக எழத, படிக்க தெரியாத மக்கள் வந்தால் அவர்களிடம் பிரச்சனையை மட்டும் விசாரித்து அவர்களுக்கு முழு கடிதத்தையும் தயார் செய்து தந்து வருகிறார். இந்த தள்ளாடும் வயதிலும், பலருக்கும் உதவிக்கரமாக வாழும் பாட்டியின் சேவை பாராட்டுதலுக்கும் மேலானது.

இந்த வயதிலும் பாட்டி மின்னல் வேகத்தில் டைப் செய்யும் விதம் பலருக்கும் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை அங்கிருந்த மக்கள் சிலர், சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close