குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி சொன்ன மாதிரி நீங்களும் பீன்ஸ் பொரியல் செய்யுங்க.
தேவையான பொருட்கள்
2 துண்டு தேங்காய்
4 வத்தல்
2 ஸ்பூன் வறுத்த கடலை
அரை ஸ்பூன் கடுகு
கால் ஸ்பூன் கடலை பருப்பு
அரை ஸ்பூன் சீரகம்
1 பச்சை மிளகாய்
அரை வெங்காயம்
பீன்ஸ் 250 கிராம்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தேங்காய, வத்தல், வேர்கடலை சேர்த்து அரைத்துகொள்ளவும். நைசாக இல்லாமல், கொஞ்சம் வேர்கடலை கடிபடும் அளவிற்கு அரித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலை பருப்பு, உளுந்து சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் பீனஸ் சேர்த்து கிளரவும். தண்ணீர் தெளித்து வேக வைத்து கொள்ளவும். தொடர்ந்து இதில் உப்பு, அரைத்ததை சேர்த்து கிளரவும்.