இந்த 2019ம் ஆண்டில் தீபாவளியை கொண்டாடும் சினிமா நட்சத்திரங்களுக்கு இடையில் சில நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலங்கள் தங்களது தல தீபாவளியை கொண்டாட தயாராகி விட்டார்கள். வருஷம் வருஷம் இந்த லிஸ்ட் மட்டும் மாறிக் கொண்டே இருக்கும்.நமக்கு பிடித்த பிரபலங்கள் இந்த லிஸ்டில் வருகிறார்களா? என்பதை பார்க்கும் ஆவல் நமக்குள் அதிகம்.
அந்த வகையில் இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாட இருக்கும் பிரபலங்கள் யார்? என்று பார்ப்போம். அவர்களுக்கு இனிய தல தீபாவளி வாழ்த்துக்களையும் சொல்லி விடலாம் வாங்க.
1. நடிகை சுஜா வருணி - சிவக்குமார்
தங்களது குழந்தை செல்ல குழந்தையுடன் இந்த ஜோடி தல தீபாவளியை கொண்டாட போகிறார்கள். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடிகையாகவும், பாடலுக்கு நடன ஆடுபவராகவும் இருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானர். இவர், சிங்கக்குட்டி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-50-1024x576.jpg)
இவர்களது காதல் கடந்தாண்டு நவம்பர் 19-ம் தேதி திருமணத்தில் முடிந்தது. சுஜா வருணிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜோடிக்கு வரும் தீபாவளி தான் தல தீபாவளி.
2. அம்பானி மகள் இஷா - ஆனந்த் பிரமோல்
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரனான தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைப்பெற்றது. இந்த பணக்கார ஜோடிகளுக்கு இந்தாண்டு தல தீபாவளி.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-51-1024x576.jpg)
3. ஆல்யா மானசா - சஞ்சீவ்
சின்னத்திரை நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் நடிகை ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியலில் நாயகியாக கலக்கி அதே சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை கடந்த மாதம் கரம் பிடித்தார். சமீபத்தில் திருமணத்தில் இணைந்த புதுமண ஜோடிகள் இவர்கள் தான். இந்த ஜோடிகளுக்கு இது தல தீபாவளி.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/bf727d3fc83ed8084bdbfcd15c247911-3.jpg)
4. என். எஸ். கே ரம்யா - சத்யா
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-52-1024x576.jpg)
கலைவாணர் குடும்ப வாரிசான என். எஸ். கே ரம்யா சமீபத்தில் சீரியல் நடிகர் சத்யாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிகள் வரும் 27 ஆம் தேதி தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
5. குறளரசன் - நபீலா ஆர் அகமது
டி. ராஜேந்திரனின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குரளரசன் தனது காதல் மனைவியுடன் தல தீபாவளி கொண்டாட இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமிய முறைப்படி இவர்களது திருமணம் நடைப்பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-49-1024x576.jpg)
6. ஹரிஸ் உத்தமன் - அமிர்தா
வில்லன், அண்ணன், நண்பன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கு இது தல தீபாவளி. கடந்தாண்டு இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக கோயிலில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/bf727d3fc83ed8084bdbfcd15c247911-4.jpg)
7. சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப்
விளையாட்டு பிரபலங்களான சாய்னா மற்றும் பாருபள்ளி இந்தாண்டு தல தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-53.jpg)
8. ஷப்னம் - ஆர்யன்
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-54-1024x576.jpg)
சின்னத்திரை பிரபலமான ஷப்னமுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இந்த ஜோடிகளும் தல தீபாவளி கொண்டாட தயாராகி விட்டனர்.
9. சாந்தினி – நந்தா
‘சித்து +2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இவர் கடந்தாண்டு நடன இயக்குனர் நந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு இந்தாண்டு தல தீபாவளி.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-55-1024x682.jpg)
10. செளந்தர்யா - விசாகன்:
ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் உடன் இந்தாண்டு இரண்டாவது திருமணம் நடைப்பெற்றது. இந்த ஜோடிகள் தங்களது தல தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-wedding-phopt-1.jpg)
11. பிரியங்கா சோப்ரா -நிக் ஜோனஸ்
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Priyanka-Chopra-Nicky-Jonas-wedding.jpg)
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஆகியோரின் காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்றது. இந்த ஜோடிகள் மும்பையில் தங்களது தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
12. தீபிகா படுகோனே - ரன்வீர் சிங்
/tamil-ie/media/media_files/uploads/2018/11/WhatsApp-Image-2018-11-15-at-8.35.20-PM-1-1024x682.jpeg)
பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் கடந்தாண்டு இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த பாலிவுட் காதல் பறவைகள் தங்களது தலதீபாவளியை கொண்டாட உள்ளனர்.
13. ஆர்யா சாயிஷா:
/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-56.jpg)
நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த தீபாவளி இந்த ஜோடிக்ளுக்கு தல தீபாவளி ஆகும்.