scorecardresearch

செத்துப்போன தக்காளி, ஆரஞ்சு, பச்சை மிளகாய் – விஜய் டிவி சுனிதா ட்ரெண்டிங் வீடியோ!

Vijay Tv Cook with Comali Sunita Latest Viral Youtube Video ஃப்ரீசரில் இருக்கும் தன்னுடைய தங்கை செய்த புளி ஐஸ் காண்பித்து காணொளியை நிறைவு செய்தார்.

செத்துப்போன தக்காளி, ஆரஞ்சு, பச்சை மிளகாய் – விஜய் டிவி சுனிதா ட்ரெண்டிங் வீடியோ!
Vijay Tv Cook with Comali Sunita Latest Viral Youtube Video

Vijay Tv Cook with Comali Sunita Latest Viral Youtube Video : எந்நேரமும் கலகலவென உரையாடும் விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் புகழ் சுனிதா, தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனலிலும் ஏராளமான கன்டென்ட்டுகளை கொடுத்து, ட்ரெண்டிங்கில் வந்துவிடுகிறார். தனக்குத் தெரிந்த கொஞ்சும் தமிழ் மொழியில் வீட்டைச் சுத்தம் செய்வது, ஹோம் டூர் எனக் காணொளிப் பதிவு செய்தவர், சமீபத்தில் ப்ரிட்ஜ் டூர் வீடியோவை வெளியிட்டிருந்தார். முழுக்க முழுக்க நகைச்சுவை கன்ட்டென்ட்டுகள் மட்டுமே நிறைந்த இந்த காணொளி 5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல்?

தனக்கு ஃப்ரிட்ஜ் டூர் போடுவதில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை என்றும், அப்படி பெரிதாகக் காட்டும் அளவிற்கு தன்னுடைய ஃப்ரிட்ஜ் பெரிதாகவோ அல்லது அதனுள் பெரிதாக எதுவும் இல்லை என்றும் முன்பே டிஸ்க்ளைமர் போட்டுவிட்டார். ஃபிரிட்ஜை திறப்பதற்கு முன்பே, பல ஆண்டுகளுக்கு முன்பு பரிசாக வந்த மேக்னட்டை அன்றுதான் ஃபிரிட்ஜின் மீது ஒட்டவைத்தார். இத்தனை வருடங்களாக அதனைப் பயன்படுத்தாமல் இருந்ததற்குக் காரணம், அதனை ஃப்ரிட்ஜ் மீதுதான் ஒட்டவேண்டும் என்பது அவருக்குத் தெரியாதாம்.

பிறகு ஃபிரிட்ஜை திறந்ததும், காலியான ப்ளூபெரி ஜாம், வாடிப்போன ஆரஞ்சு பழம் என ஆரம்பமே அமக்களப்படுத்தினார் சுனிதா. சிறிய ஃப்ரிட்ஜ் என்பதால், பார்ப்பதற்கும், விவரிக்கவும் அவ்வளவாக எதுவுமில்லை என்றாலும், பெரும்பாலான மக்களின் வீடுகளில் இருக்கும் ஃப்ரிட்ஜ் போன்று எளிமையாக இருந்ததால் மக்களிடத்தில் இந்த காணொளி அதிக கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து பயன்படுத்தப்படாத மஸ்டர்டு சாஸ், சாக்லேட் சிரப், பரிசாக வந்த காஸ்ட்லீ சாக்லேட்டையும் காட்டினார். பிறகு, கற்றாழை ஜெல், முட்டை, குக் வித் கோமாளி செட்டில் கொடுத்த எலெக்ட்ரோலைட் ட்ரிங்க் மற்றும் ஹோட்டல்களில் இருந்து எடுத்துவந்த சிறிய பட்டர் ஸ்ப்ரெட் ஆகியவற்றைக் காட்டினார். ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்தபிறகு, அங்கிருக்கும் கியூட் சிறிய பொருள்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து வருவது இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

பிறகு, அழுகிப்போன 5 தக்காளி, காய்ந்து கருவாடாகிப்போன மிளகாய், ஒருபாகம் மட்டும் முழுவதும் காய்ந்த புதினா ஆகியவற்றை அடக்கம் செய்வதற்காகத் தனியே பிரித்தார். அதுமட்டுமின்றி ஒரு வாரமாக ஃப்ரிட்ஜிலேயே உறங்கிக்கொண்டிருக்கும் பல சாப்பாட்டு டப்பாக்கள், பிரியாணி மற்றும் ரய்தா ஆகியவற்றை வெளியேற்றினார். பிறகு சோயா பால், ஸ்வீட் கார்ன், லட்டு (அப்படியே சாப்பிடவும் செய்தார்) ஆகியவற்றைக் காண்பித்து, பிறகு ஃப்ரீசரில் இருக்கும் தன்னுடைய தங்கை செய்த புளி ஐஸ் காண்பித்து காணொளியை நிறைவு செய்தார்.

ஆகமொத்தத்தில் இது ஃப்ரிட்ஜ் டூர் என்பதைவிட, க்ளீனிங் டூர் எனலாம். அந்த அளவிற்கு ஃப்ரிட்ஜ் முதலில் இருந்ததற்கும் இறுதியில் இருந்ததற்கும் வித்தியாசம் ஏராளம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv cook with comali sunita latest viral youtube video

Best of Express