புது வீடு கட்டிய ராமர்: அணி வகுத்த விஜய் டி.வி பிரபலங்கள்

அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டு மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் காமெடியன் ராமர்.

அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டு மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் காமெடியன் ராமர்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV Ramar

Vijay TV Ramar New House warming Function

விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது. விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.

Advertisment

அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.

அந்தவகையில் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டு மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் காமெடியன் ராமர். இவர் அந்த நிகழ்ச்சியில் சும்மா விருந்தினர்களை சிரிக்க வைக்க ஆடிய ஆத்தாடி என்ன உடம்பி பாட்டு பயங்கர வைரலாகி சினிமாவில் கூட வந்துவிட்டது. அதேபோல லஷ்மி ராமகிருஷ்ணனை போல வேடமிட்டுக் கொண்டு சொல்வதெல்லாம் பொய், மேலே வைக்காத கை என, என்னம்மா இப்படி பண்றீங்கிளேமா என்ற ஒரே டயாலக்கில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார். இவரது திறமையை பாராட்டி ராமர் வீடு என்ற பெயரில் தனி ரியாலிட்டி ஷோவையே விஜய் டிவி ஒளிபரப்பியது.

விஜய் டிவியின் மற்ற காமெடியன்கள் அடுத்தவரை கலாய்த்து பிரபலமாகினர். ஆனால், ராமர் கொஞ்சம் வித்தியாசம், இவர் சக காமெடியன்களிடம் கலாய் வாங்கியே பிரபலமானார்.

Advertisment
Advertisements

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமர் ஒரு காமெடியன் மட்டுமல்ல. மதுரை சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ராமர் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டில் புதுமனை புகுவிழாவில் சக விஜய் டிவி காமெடியன்கள் தங்கதுரை, ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் மற்றும் செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த புகைப்படங்களை அவர்கள் தங்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.

புதுவீடு கட்டிய ராமருக்கு இப்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: