Advertisment

நடிப்பு, அரசியல், பிசினஸ், விளையாட்டு... 'சகலகலா வல்ல' விஜயகாந்த் ஃபேமிலி

நடிகர் விஜயகாந்த் மதுரையில் ரைஸ் மில்லை நிர்வகித்து கொண்டிருந்தார். அப்போது அவர் பெயர் விஜயராஜ். பலருக்கு இருக்கும் சினிமா ஆசையைப்போல் இவருக்கும் சினிமா ஆசை இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'சகலகலா வல்ல' விஜயகாந்த்

'சகலகலா வல்ல' விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் மதுரையில் ரைஸ் மில்லை நிர்வகித்து கொண்டிருந்தார். அப்போது அவர் பெயர் விஜயராஜ். பலருக்கு இருக்கும் சினிமா ஆசையைப்போல் இவருக்கும் சினிமா ஆசை இருந்தது. இதனால் சென்னை வந்த அவர் சினிமா வாய்ப்பை தேடினார். ஆனால் அவரின் உருவத்தை காரணம்காட்டி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Advertisment

ஆனால் அவர் முயற்சியை நிறுத்தவில்லை.  விடா முயற்சியால், அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படமே, கதாநாயகனா இருவருக்கு கிடைத்த முதல் வெற்றி.

இவர் நடித்த படங்களில் ’வைதேகி காத்திருந்தாள்’, அம்மன் கோவில் கிழக்காலே’ போன்ற படங்கள் இவரை அனைத்து மக்களும் ரசிக்கும்படியான நடிகனாக மாற்றியது.

இந்நிலையில் அவரது 100வது திரைப்படம்தான் ’கேப்டன் பிரபாகரன்’.  இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியால்தான், இவருக்கு கேப்டன் என்ற பட்டம் கிடைத்தது. இந்த படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி.

விஜயராஜ் என்ற இவரது பெயரை விஜயகாந்த் என மாற்றியவர் இயக்குநர் எம்.ஏ.காஜா. விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் அவருக்கு இந்த 6 படங்கள் முக்கிய பெயரை பெற்று தந்துள்ளது.

 ஏழை சாதி, வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்ட காவல்காரன், வானத்தைப் போல, தமிழ்செல்வன், ரமணா திரைப்படம்.

குறிப்பாக ரமணா திரைப்படம் இவருக்கு மேலும் புகழை பெற்று தந்தது. இந்த திரைப்படத்தில் வரும் நீளமான அரசியல்  வசனங்களை காமெடி நிகழ்ச்சிகளில் கூட மிமிக்ரி செய்து போட்டியாளர்கள் பிரபலப்படுத்தினர்.

இதுமட்டும் அல்லாமல், நடிகர்கள் பலரும் கொடுத்த பேட்டிகளில்கூட விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்ததை குறிப்பிட்டுள்ளனர். கடனில் மூழ்கிய பல நடிகர்களுக்கு உதவி என்று கேட்ட உடனே சென்று உதவியவர் விஜயகாந்த.

நடிகை நளினி யூடியூப் சேனலுக்கு  கொடுத்த பேட்டியில் கேப்டன் விஜயகாந்த் தனக்கு செய்த உதவியை பற்றி கூறியிருந்தார். நளினி கணவரை பிரிந்த செய்தி கேட்டு முதலில் உதவி செய்ய வந்த நபர் விஜயகாந்த் என்று கூறியிருந்தார். இதுமட்டும் அல்லாமல் நடிகர் ஷாம் கொடுத்த பேட்டியிலும் ‘ தனது பிரச்சனையை விஜயகாந்த் தீர்த்து வைத்தார்’ என்று கூறியிருந்தார்.

நடிகர் சங்கதிற்காக அவர் செய்த செயல் அரசியல் வருகைக்கு ஒரு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். 1999ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவரானார். இவர் நடிகர் சங்கத்தின் பொறுப்பை எடுத்துகொண்ட போது, சங்கம் பெரும் கடனில் இருந்தது. இந்நிலையில் வெளி நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அவர் கடன்களை அடைத்தார்.  நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி பெரும் தொகையை வங்கியில்  டெபாசிட் செய்தார்.

 2005ம் ஆண்டு, செப்டம்பர் 14ம் தேதி மதுரையில்  மாபெரும் மாநாட்டை  நடத்தி, அதில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்தார். 2006ம் ஆண்டு கட்சி தொடங்கிய பிறகு அவர் அரசியலில் முழுதாக செயல்படத் தொடங்கினார்.  பல வருடங்களாக ஆட்சி செய்த அதிமுக, திமுகவிற்கு எதிராக போட்டியிடும் அளவிற்கு அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது.

குறிப்பாக சென்னையில் வெள்ளம் வந்தபோது, மக்களை நேரில் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தார். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை நேரடியாக விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மேலும் சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அவர் பேசியது அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment