விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் மீண்டும் லீட் ரோலில் கலக்கி வருகிறார் பவித்ரா ஜனனி. சென்னையில் பிறந்த இவர் ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார். புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார். படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்தார்.
மெல்ல மெல்ல வாய்ப்புகள் அவரைத் தேடி வர தொடங்கியது. ரியோ நடித்த சரவனன் மீனாட்சி தொடரில் பவித்ராவின் நடிப்பு பெரிதும் கவர்ந்திருந்தது. அதில் துளசி கேரக்டரில் அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது.கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என தொடர்ந்து வாய்ப்பு கிடைத்த அத்தனை சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வந்துள்ளார். வாழ்க்கையில் எது வந்தாலும் அதை சந்தித்துக்கொள்ளலாம் என எப்போதும் பாஸிட்டிவ் வாக யோசிப்பவர் பவித்ரா. சிறிய வேடமாக இருந்தாலும் தனக்கு தரப்படும் கேரக்டேரில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வந்துள்ளார்.
பிறகு ராஜா ராணி சீரியலில் நெகடிவ் ரோலில் நடிக்க வந்த வாய்ப்பையும் விடாமல் ஏற்றுக்கொண்டு அதிலும் தனது திறமையை காட்டியுள்ளார்.பவித்ராவிற்கு நெகடிவ் ரோலில் நடிப்பது ரொம்ப பிடித்த ஒன்று.அந்த தொடரில் திவ்யாவாக அவர் நடித்திருந்தது கச்சிதமாக பொருந்தியது. ராஜா ராணி சீரியலில் இவருடைய நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு அவருக்கு ஈரமான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. உடனே ஓகே சொல்லி நடிக்கத் தொடங்கினார்.இந்த சீரியலில் மலர் கேரக்டர் பயங்கர ஹிட் கொடுத்தது. இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வரவேற்பு அனைத்தும் அவரது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கூறலாம்.
தற்போது தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பவித்ரா. அபிநயா என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதில் ஹீரோவாக வினோத்பாபு நடித்து வருகிறார். இந்த தொடரின் ப்ரோமோவே நல்ல ரீச் ஆனது. அபிநயாவிற்கு கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டும் நாயகன் செயல் மூலம் பல விமர்னசங்களை பெற்றதுடன் ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியது. சில எபிசோடுகள் கடந்த நிலையில் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆங்கராக பயணத்தை தொடங்கி சீரியலில் துணை நடிகையாக அறிமுகமாகி இன்று தொடர்ந்து 2 சீரியல்களில் லீட் ரோலில் கலக்குகிறார் பவித்ரா. இவரின் திறமையைக் கண்டு விஜய் தொலைக்காட்சி அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
முதலில் இவருக்கு கதாநாயகி ரோல் எல்லாம் செட் ஆகாதுன்னு பலரும் கேலி செய்துள்ளனர். அதன் பிறகு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வெற்றி கண்டுள்ளார் மலர். நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே m.phil படிப்பை முடித்தார்.இதற்கு உறுதுணையாக இருந்தது அவரின் குடும்பமும் நல்ல நண்பர்களும் தானாம். சீரியல்களில் கதாநாயகியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மோகம் எல்லா நடிகைகளையும் ஆட்கொண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
சமூக வலைதளங்களில் நாள்தோறும் போட்டாக்களை அப்லோடு செய்வது, டப்மேஷ், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் பதிவிடுவது என ஆக்டிவாக இருக்கிறார் பவித்ரா. இவருக்கு விதவிதமான காஸ்டியூம்களில் ஃபோட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிடுவது ரொம்ப பிடித்தமான ஒன்றாம். இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோக்களை பதிவிட்டு தன்னுடைய பேன்ஸ்களை கலங்கடித்து வருகிறார். மாடல் உடைகள் முதல் பட்டுப்புடைவைகள் வரை அவருக்கு பொருத்தமான அத்தனை காஸ்டியூமிலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா சான்ஸ் கிடைத்தாலும் உடனே ஓகே சொல்லும் ஐடியாவில் இருக்கிறார் பவித்ரா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil