இதுதான் எங்கள் கொள்கை, மனம் திறந்து பல விஷயங்களை Village Cooking Channel வைத்திருப்பவர்கள் பதில் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் பேசியதாவது : ” உணவகம் தொடங்க எங்களிடம் பல பாட்னர்கள் வந்து கேட்டார்கள். எங்களை பொருத்தவர் யாருடன் உணவகம் தொடங்கினாலும் எங்களது வாடிக்கையாளர்களை, நாங்கள் உணவகத்தின் வாடிக்கையாளராக மாற்ற வேண்டும். குறைந்த பணம் சம்பாதிக்கும் நபர்கள் முதல் அதிகம் சம்பாதிக்கும் நபர்கள் வரை எங்கள் சேனலை பார்க்கிறார்கள். தினமும் 100 ரூபாய் போதும் சாப்பாட்டிற்கு என்று நினைப்பவர்களிடம் போய் ரூ. 500-க்கு ஒரு உணவை விற்பனை செய்ய முடியாது. அதுபோலத்தான் அதிகம் சம்பளம் வாங்கும் நபர்கள் குறைந்த விலையில் உணவை வாங்க மாட்டார்கள். இதனால் எப்படியும் விமர்சனங்கள் எழும் என்பதால் இதுவரை உணவகம் தொடங்கவில்லை. எதிர்காலத்தில் எங்கள் பார்வையாளர்கள் இதுபோல நல்ல ஐடியாவோடு வந்தால் இதை பற்றி சிந்திக்கலாம்.
ஒரு பிராண்டை உருவாக்கி வைத்துள்ளோம். அதற்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது. ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது. தெரிந்த துறையில் பணம் விட்டவர்களும் அதிகம். யூடியூம் சேனலை ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் சில வழிமுறைகளை உருவாக்கினோம். அதில் எந்த பிரண்டையும் விளம்பரம் செய்யக்கூடாது. யாரிடமும் ஒரு ரூபாய் கூட கை நீட்டி காசு வாங்கிக்கொண்டு அதற்கு வேலை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். விக்ரம் படத்தில் நடித்தபோது கூட ஒரு ரூபாய் வாங்கவில்லை” என்று அவர் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“