இந்தியாவின் 71-வது சுதந்திர தினமான இன்று, இந்த இடங்களுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டு இந்திய வரலாற்றை அறிந்துகொள்வோம்.
1. டெல்லி:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/red-fort-75911-300x167.jpg)
இந்திய வரலாற்றுடன் மிகவும் தொடர்புடையதும், அதிகரமிக்கதுமான இடம் டெல்லி. சுதந்திர தினமான இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளான செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வு, கம்பீரமான அணிவகுப்பு ஆகியவற்றை கண்டுகளிக்கவே நிச்சயம் டெல்லிக்கு செல்ல வேண்டும். டெல்லியில் உள்ள பல்வேறு நினைவகங்கள், பாரம்பரியத்தை உணர்த்தும் இடங்கள் ஆகியவை, டெல்லியின் கலாச்சார அடையாளத்தை உணர்த்தும்.
எப்படி செல்ல வேண்டும்?
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு எளிதாக செல்லலாம். அங்கிருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு எளிதில் சென்றடையும் விதமாக விமான சேவை, ரயில் சேவை, சாலை போக்குவரத்து ஆகியவை டெல்லியில் உள்ளன.
2. சபர்மதி ஆசிரமம், குஜராத்:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/sabarmatiashram480-300x167.jpg)
சபர்மதி ஆசிரமத்திற்கு செல்வதன் மூலம் மகாத்மா காந்தி இந்திய சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்கை அறியலாம். சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஆசிரமம் இந்திய சுதந்திர இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒத்துழையாமை இயக்கம், ஸ்வதேசி இயக்கம், ஆகியவை அந்த இடத்தின் பெருமையை உணர்த்தும். இந்த ஆசிரமத்தில் மகாத்மா காந்தி 12 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். இந்த ஆசிரமம் இப்போது அருங்காட்சியகமாக உள்ளது.
எப்படி செல்ல வேண்டும்?
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த ஆசிரமத்திற்கு எளிதில் செல்லலாம். அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு பேருந்துகள், ரயில்கள் ஆகியவை இயக்கப்படுகின்றன.
3. ஜோத்பூர், ராஜஸ்தான்:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/mehrangarh-fort-jodhpur-300x200.jpg)
இந்தியாவின் பெருமையை அறிய ஜோத்பூருக்கு நிச்சயம் செல்ல வேண்டும். குறுகிய தெருக்கள், சந்துகள், ஆடம்பரமான கோட்டைகள் ஆகியவை ஜோத்பூருக்கு பெயர்போனவை. மெஹ்ராங்கர் கோட்டைக்கு செல்ல மறந்து விடாதீர்கள்.
எப்படி செல்ல வேண்டும்?
ஜோத்பூருக்கு செல்ல சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து வசதி உள்ளது.
4. செல்லுலார் சிறை, போர்ட் பிளேயர்:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/2big-300x197.jpg)
ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது இந்திய சுதந்திர போராட்டத்திற்காக உயிர்நீத்த தியாகிகளின் பெருமையை நாம் இங்கு அறியலாம். அக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒலி-ஒளி காட்சியாக அரங்கேற்றப்படுவதை தவறவிட்டு விடாதீர்கள். அந்தமான் கடற்கரையில் ஓய்வெடுப்பதற்காக அங்கு ஒருமுறை சென்றுவிடுங்கள்.
எப்படி செல்ல வேண்டும்?
வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம், அல்லது போர்ட் பிளேயர் விமான நிலையத்திலிருந்து எளிதில் செல்லுலார் சிறைக்கு செல்லலாம்.
5. ஆக்ரா, உத்தரப்பிரதேசம்:
/tamil-ie/media/media_files/uploads/2017/08/timthumb-300x169.jpg)
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண ஆக்ராவிற்கு செல்ல வேண்டும். யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆக்ரா கோட்டை, யமுனை நதி, இந்து மற்றும் இஸ்லாமிய கலவண்ணத்தில் உருவான கட்டடங்களை காண வேண்டும்.
எப்படி செல்ல வேண்டும்?:
ஆக்ராவுக்கு செல்ல ரயில் சேவை, பேருந்து சேவை, வான்வழி போக்குவரத்து வசதி ஆகியவை உள்ளன.