நாம் அனைவரும் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை விரும்புகிறோம். எவ்வாறாயினும், நமது ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் மாசுபட்ட சுற்றுச்சூழலுக்கு மத்தியில், களங்கமில்லாத சருமத்தை அடைவது கடினமான ஒன்று.
Advertisment
வைட்டமின் ஈ, வீக்கத்தைக் குறைப்பதற்கும், தோல் சேதத்தைத் தடுப்பதற்கும், சருமத்தின் இயற்கையான ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அவசியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது.
வைட்டமின் ஈ, சருமத்தில் பயன்படுத்தப்படும் போது, அது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும், வறண்ட பகுதிகளை ஈரப்பதமாக்குகிறது மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
நீங்களே வீட்டில் சொந்தமாக வைட்டமின் ஈ கிரீம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் – 1 டீஸ்பூன்
வைட்டமின் ஈ மாத்திரை – 1
எப்படி செய்வது?
ஒரு பருத்தி துணியை எடுத்து, அதை தயிரில் போட்டு, அதிகப்படியான தண்ணீரை பிழிந்து அகற்றவும். வடிகட்டிய தயிரை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைக்கவும்.
8 வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்த்து, கிரீமி கன்சிஸ்டன்சி வரும் வரை நன்கு கலக்கவும்.
எப்படி அப்ளை செய்வது?
உங்கள் முகத்தில் கிரீமை மேல்நோக்கி தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். உங்கள் சருமம் க்ரீமை முழுமையாக உறிஞ்சுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
தயிர் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பளபளப்பாக்கவும் உதவுகிறது. இது ரத்த ஓட்டம் மற்றும் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“