அதிர்ஷ்டம் ஒருவாட்டி தான் கதவ தட்டும்னு சொல்லுவாங்க: வி.ஜே தீபிகா எமோஷனல்

’அதிர்ஷ்டம் ஒருவாட்டி தான் கதவ தட்டும் சொல்லுவாங்க, அது சரிதான், ஆனா முயற்சியும் நம்பிக்கையும் ஒன்னு இல்ல ஆயிரம் கதவுகளை கூட திறக்க செய்யும்.

’அதிர்ஷ்டம் ஒருவாட்டி தான் கதவ தட்டும் சொல்லுவாங்க, அது சரிதான், ஆனா முயற்சியும் நம்பிக்கையும் ஒன்னு இல்ல ஆயிரம் கதவுகளை கூட திறக்க செய்யும்.

author-image
abhisudha
New Update
VJ DEEPIKA LAKSHMANAPANDI

VJ DEEPIKA LAKSHMANAPANDI

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

Advertisment

விஜே தீபிகா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். அதில் தீபிகாவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரம் சேர்ந்து சினிமா பாடல்கள் மற்றும் மூவி சீன்களை ரீ கிரியேட் செய்யும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இப்போது தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தீபிகா சமீபத்தில் பகிர்ந்த ஒரு இன்ஸ்டா பதிவு பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.

Advertisment
Advertisements

அதில், ’அதிர்ஷ்டம் ஒருவாட்டி தான் கதவ தட்டும் சொல்லுவாங்க, அது சரிதான், ஆனா முயற்சியும் நம்பிக்கையும் ஒன்னு இல்ல ஆயிரம் கதவுகளை கூட திறக்க செய்யும்.

ஐஸ்வர்யாவா என்னோட பயணம் பாதியில முடிஞ்சது ஆனா இப்போ எங்க முடிஞ்சதோ அங்கயே ஒரு தொடக்கம் வந்துருக்கு

எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் தான் சொல்ல போறேன். ஒரு பொருள் நம்மகிட்ட இல்லாதப்போ தான் அதோட வலி என்னனு நமக்கு  புரியும், எனக்கும் நிறையவே புரிஞ்சது நல்லாவே தெரிஞ்சது.

இப்போ அது திரும்ப கிடைச்சிருக்கு, அதனால அதோட மதிப்பு எனக்கு நல்லவே தெரியும்.

இவ்ளோ நாள் எனக்காக ஃபீல் பண்ணவங்களுக்கும், இப்போ எனக்கு விஷ் பண்றவங்களுக்கும் ரொம்ப  ரொம்ப நன்றி.

தீபிகாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் உங்களோட ஆதரவும் வரவேற்பும் எப்பவும் வேணும்’ என்று தீபிகா மனமுருக அதில் பதிவிட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள், உங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல மறுபடியும் பாக்கிறதில்ல சந்தோஷம். ஐஸ்வர்யா கேரெக்டர் உங்களுக்கு மட்டும்தான் செட் ஆச்சு, அதை மிஸ் பண்ணாதீங்க என்றும் கமெண்டில் வாழ்த்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: