scorecardresearch

முகப்பரு அதிகமா இருக்கும் போது பால், சர்க்கரை, கோதுமை எடுத்துக்க கூடாது.. விஜே தீபிகா

தீபிகா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது முகப்பரு, அதிலிருந்து மீண்டு வந்தது என அனைத்தையும் அந்த பேட்டியின் போது தீபிகா பகிர்ந்து கொண்டார்.

முகப்பரு அதிகமா இருக்கும் போது பால், சர்க்கரை, கோதுமை எடுத்துக்க கூடாது.. விஜே தீபிகா
VJ Deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இந்நிலையில், தீபிகா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது முகப்பரு, அதிலிருந்து மீண்டு வந்தது என அனைத்தையும் அந்த பேட்டியின் போது தீபிகா பகிர்ந்து கொண்டார்.

ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு தீபிகா அளித்த பேட்டி இதோ!

இப்போ முகப்பரு இல்லாம சருமம் ரொம்ப தெளிவா இருக்கு. அதுக்கு நீங்க என்ன பண்ணீங்க?

ஆரம்பத்துல முகப்பரு அதிகமா இருக்கும்போது பால், சர்க்கரை, கோதுமை எதுவுமே எடுத்துக்க கூடாது. பிராயிலர் சிக்கன் சாப்பிடக்கூடாது. நாட்டுக்கோழி வேணா சாப்பிடலாம். சாதம் கூட, வெள்ளை அரிசி இல்லாம பிரெளன் ரைஸ் எடுத்துக்க சொன்னாங்க.

எல்லா ஜூஸூம் குடிக்கலாம். குறிப்பா எலுமிச்சை ஜூஸ் குடிச்சா அது முகப்பரு வராம உதவும். முட்டையில வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம்.  எல்லாம் சாப்பிட்டு பழகிட்டு, இந்த லைஃப் ஸ்டைல் கடைபிடிக்க ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனா, ஒரு 3-4 மாசம் இதை ஃபாலோ பண்ணேன். முகப்பரு கம்மியாக ஆரம்பிச்சதும், அவங்களே கொஞ்சகொஞ்சமா எடுத்துக்க சொல்லிட்டாங்க.

சாப்பாடு தவிர ஸ்கின் அப்ளிகேஷன்ஸ் ஏதாவது எடுத்துக்கிட்டீங்களா?

எனக்கு ஆஷா-னு ஒரு டாக்டர் தான் பாத்தாங்க. அவங்களுக்கு பெரிய தேங்ஸ் சொல்லனும். 11 மணிக்கு மேல நான் ஆன்லைன்ல இருந்தா என்னை கால் பண்ணி திட்டுவாங்க. என்ன தீபிகா? முகப்பரு ஜாஸ்தியா இருக்கு. நீங்க தூங்கமா இருக்கீங்க.. சரியா தூங்கலனாலும் முகப்பரு வரும் சொல்லுவாங்க. அந்தளவுக்கு எனக்கு முகப்பரு கம்மியா ஆகணுங்கிறதுல அவங்க ரொம்ப இன்வால்வ் ஆயிட்டாங்க.

எந்த லிப் பாம், மாய்ஸ்சரைசர், பேஸ் வாஷ், சோப் யூஸ் பண்ணனும் எல்லாமே எனக்கு சொல்லிடுவாங்க. அவங்க சொல்றது மட்டும் தான் நான் ஃபாலோ பண்ணேன். நானா எதுமே பண்ணல.

இப்போ என்ன மாதிரி பிரொடக்ட்ஸ் யூஸ் பண்றீங்க?

இப்போ மாய்ஸ்சரைசர், சன்ஸ்கீரின், டோனர் எல்லாம் யூஸ் பண்றேன். மேக்கப் போடுறதுக்கு முன்னாடி, சருமத்தை பாதுகாக்கிற மாதிரி ஒரு லேயர் போட்டு, அப்புறம் மேக்கப் போடுவேன். ஹெவி மேக்கப்பா இருந்தா, வேலை முடிஞ்ச உடனே கலைச்சுடுவேன்.

நான் ஃபிரெண்ட்ஸ் ஓட வெளியே போறேனா, அதிகபட்சம் மாய்ஸ்சரைஸர் போடுவேன். சன்ஸ்கீரின் வேணுனா போடுவேன். அப்புறம் காம்பக்ட் பவுடர் மட்டும் போடுவேன். திக் ஐபிரோஸ் பிடிக்கும். அதனால ஐபிரோஸ் பண்ணுவேன். கண்ணுல எதுவுமே போடமாட்டேன். நியூட் ஷேட் லிப்ஸ்டிக். மொத்தமே இந்த 4 பிரொக்ட்ஸ் தான்.

அதேமாதிரி ஏதாவது ஷூட்டிங், போட்டோஷூட் அப்போ முடிஞ்ச உடனே மேக்கப் ரிமூவ் பண்ணிடுவேன்.

முன்னாடி கம்மி விலையில இருக்கிற பிரொடக்ட்ஸ் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, இப்போ ஸ்கின்க்கு கொஞ்சம் பாத்து வாங்குறேன். 3000-4000 ரூபாய்னாலும் வேற வழியில்லை. இப்போ வாங்கிடுவேன்.

முகப்பரு இருந்த டைம்ல, நான் தேன், தயிருனு நிறைய டிரை பண்ணிருக்கேன். ஆனா எனக்கு ஒன்னுக்கூட வேலை செய்ஞ்சதே இல்ல. சின்ன வயசுல இருந்து எனக்கு ஆயில் ஸ்கின் தான். இப்போதான் டிரிட்மெண்ட் அப்புறம் கொஞ்சம் டிரையா ஆகிருக்கு.

அதனால இது பண்ணா சரியாயிடும்னு பர்சனலா எனக்கு எதுவும் இல்ல. அதனால நம்ம உடம்புக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சுட்டு அப்புறமா, டிரிட்மெண்ட் பண்றது நல்லது.

யாராவது என்கிட்ட முகப்பரு போறதுக்கு என்ன செய்யனும் கேட்டாங்கனா, நான் என்னோட டாக்டர் நம்பர் அனுப்பிட்டு, அவங்ககிட்ட பேச சொல்லிருவேன்.

இப்படி விஜே தீபிகா, ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், முகப்பரு, அதிலிருந்து மீண்டு வந்தது என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ இதோ!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vj deepika instagram pandian stores vijay tv

Best of Express