scorecardresearch

இந்த சீன்ல அவ்ளோ லவ் இருக்கும்: விஜே தீபிகா வீடியோ

விஜே தீபிகா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர்.

VJ Deepika
VJ Deepika

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

விஜே தீபிகா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். அதில் தீபிகாவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரம் சேர்ந்து சினிமா பாடல்கள் மற்றும் மூவி சீன்களை ரீ கிரியேட் செய்யும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அப்படி சமீபத்தில் காலா படத்தில் வரும் ஒரு காட்சிக்கு தீபிகாவும், சரவண விக்ரம் சேர்ந்து ரீ கிரியேட் செய்த வீடியோ தான் இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.

”வயசான அப்புறம் லவ் பண்றது அவுங்களுக்கு எப்படி இருக்கும் தெரியல ஆனா, அதை பாக்குற நமக்கு எப்பவும் அது ஒரு நல்ல ஃபீல் கொடுக்கும்

காலா படத்துல இந்த சீன் நிறைய பேரோட ஃபேவரைட் சீனா இருக்கும்

ஏன்னா இந்த சீன்ல அவ்ளோ லவ் அண்ட் எமோஷன்ஸ் இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மற்றும் ஈஸ்வரி ராவ் மேம் அளவுக்கு கண்டிப்பா எங்களால ஃபெர்பார்ம் பண்ண முடியாது.

ஆனா கரிகாலன் செல்வி ஒட லவ்-அ ரீ கிரிரேட் பண்ணனும் தோனுச்சு, அதனால எங்களோட ஒரு சின்ன முயற்சி. உங்களுக்கு பிடிக்கும் நம்புறோம்”  என தீபிகா அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், உங்களோட ரி கீரியேட் வீடியோஸ் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், ரெண்டு பேரும் நல்ல நடிக்கிறீங்க. சீக்கிரமே பெரிய இடத்த பிடிக்கிறதுக்கு வாழ்த்துகள் என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vj deepika instagram saravana vikram kaala movie