பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம், தமிழகமெங்கும் பிரபலமானவர் விஜே தீபிகா. இதில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக, சீரியலில் குறுகிய காலமே நடித்தாலும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பிறகு முகப்பரு சிகிச்சைக்காக தீபிகா, சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார்.
Advertisment
தீபிகா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது ஆங்கரிங் பயணம், சீரியல், வெற்றி தோல்வி, குடும்பம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். வீடியோவில் தீபிகா பேசுகையில்; நான் வீட்டுல மூனாவது பொண்ணு. எனக்கும், அக்காவுக்கும் கிட்டத்தட்ட 10 வயசு வித்தியாசம். என் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் 60 வயசு மேல ஆகுது. நான் மீடியாவுக்கு வர்றதுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப பயந்தாங்க. சொந்தகாரங்க திட்டும்போது ரொம்ப வருத்தப்படுவாங்க.
எந்தவொரு ஃபங்ஷனுக்கு போனாலும், ஏதாவது ஒன்னு கேட்டு அம்மாவ அழ வச்சுடுவாங்க. அம்மா அழுதுட்டே வந்து புலம்புவாங்க. இப்போவே நிறைய பேரு நீ படிச்சிருக்க.. உனக்கு வீடு, குடும்பம் பாக்கணும்னா, நீ படிச்ச வேலைக்கு போலாமே. ஏன் இதை பண்றனு கேட்பாங்க. ஆனா, இது என்னோட ஆசை. அதேநேரத்துல நான் இதுக்காக ஓடுறேன்னு என் அம்மா, அப்பாவையும் விட முடியாது. ரெண்டையுமே பேலன்ஸ் பண்ணனும்.
மீடியாவுக்கு வந்த புதுசுல நிறைய பொய் சொல்லிருக்கேன். நான் சென்னையில ஹாஸ்டல்ல இருந்தேன். என் அம்மா, அப்பா ஊருல இருப்பாங்க. அப்போ லோக்கல் சேனல்ல வேலைப் பாத்தேன். என்னோடது லைவ் ஷோ. நைட் 7-8 வரை ஆஃபிசுல இருக்கணும். அப்புறம்தான் ஹாஸ்டல் வரமுடியும். என்னோட ஸ்டுடியோ தேனாம்பேட்டையில இருக்கும். நான் சூளைமேட்டுல ஹாஸ்டல்ல இருந்தேன். வேலை முடிச்சு, ஹாஸ்டல் வரதுக்கு நைட் 9.30 ஆயிடும். ஆனா நான் வீட்டுல 7 மணிக்கே ஹாஸ்டல் வந்ததா சொல்லிருவேன். என் அம்மா, அப்பா ரொம்ப வெள்ளந்தி. நான் என்ன சொன்னாலும் நம்பிருவாங்க.
Advertisment
Advertisements
ஊருல இருக்கும்போது, சாயங்காலம் 6 மணிக்கு மேல வெளியே போகக் கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா, நான் 10 மணிக்குத்தான் ஹாஸ்டலுக்கு வருவேன். அதுவும் சென்னை புது இடங்கிறதால ரொம்ப பயப்படுவாங்க. என் அம்மா, அப்பாவ கஷ்டப்படுத்தனும், அவங்கள ஏமாத்தனும் எண்ணமெல்லாம் என் மனசுல கிடையாது.
நான் ஆடிஷன் போறதெல்லாம் சொல்லமாட்டேன். ஆனா கிடைச்சதுக்கு அப்புறம், சும்மா காலேஜ் போயிட்டு இருந்தேன்மா, ஸ்டேஜ்ல பேசுறது பாத்துட்டு அவங்களா கூப்பிட்டாங்க. என் ஃபிரென்ட் ஆடிஷன் போனா. நான் அவக்கூட சும்மா துணைக்கு போனேன். என்னையும் ஆடிஷன் கொடுக்க சொன்னாங்க. செலெக்ட் ஆகிட்டேன். இப்படித்தான் சொல்லுவேன். நான் தேடி அலையிறேனு எதுவுமே சொல்லமாட்டேன்.
அதேமாதிரி வேலை பாத்த புதுசுல நிறைய சம்பளம் வருதுனு பொய் சொல்லுவேன். ஆனா, அந்த நேரம் எனக்கு சம்பளமே இருக்காது. சம்பளம் இல்லாம நீ எப்படி மெயின்டேன் பண்ற? ஏன் போகனும் கேட்பாங்க.. இப்படி கொஞ்சம், கொஞ்சம் பொய் சொல்லிட்டு வந்ததுதான். அப்புறம் போகபோக, என் அம்மா, அப்பாவுக்கு புரிஞ்சிக்குற பக்குவம் வந்த உடனே உண்மைய சொல்ல ஆரம்பிச்சேன்.
நான் சீரியல் எதிர்பார்த்து வந்து பொண்ணு கிடையாது. ஆங்கரிங் மட்டும்தான் என் மனசுல இருந்தது. நிறைய சேனல்ல ஆடிஷன்ஸ் கொடுத்துருந்தேன். எங்கயுமே கிடைக்கல. முதல்ல ஒரு டிவிக்கு போனுனா, அதுல எனக்கு பெரிசா அனுபவம் கிடையாது. எந்த வழியுமே தெரியாது.
நான் சின்ன சின்ன லோக்கல் சேனல்லய வேலை பாத்துட்டே இருந்தேன். திடீர்னு சன் டிவியில கிடைக்கும்போது ஒகே, போலாம் அப்படிங்கிற எண்ணம்தான் இருந்தது. நடிப்பு மேல ஆர்வம் இருந்து போகல.. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டாச்சு. சின்ன சேனல்ல இருந்து இப்போ, பெரிய சேனலுக்கு போறோம்னுதான் நினைச்சேன்.
சீரியல் வாய்ப்பு கிடைச்ச அப்புறம், உள்ளே போயி இருபது நாள் வேலை பாத்தேன். சீரியலும் முடிஞ்சது. அந்த ரெண்டு மாசத்துல எனக்கு எல்லாமே வெறுத்துட்டு. மீடியாவே வெறுக்குற அளவுக்கு நான் கஷ்டப்பட்டேன். ஏனா, எனக்கு ஒன்னுமே தெரியாது.
ஆங்கரிங்ல புதுசா சேரும்போது, ஒன்னுமே தெரியலனாலும் சொல்லிக் கொடுப்பாங்க.. ஆனா, டிவி சீரியல அப்படி இல்ல. ஆனா, இது பெரிய சேனல். ஆக்டிங்ல ஒன்னுமே தெரியாம போயி நின்னுட்டு அழுதுருக்கேன். அந்த சமயம் நம்ம தெரியாம வந்துட்டோமானு தோனும். ஆனா, அப்புறம் நானே என்னை சமாதானபடுத்திக்கிட்டேன். இதெல்லாம் ஸ்கூல், காலேஜ் படிக்கிற மாதிரி, கடந்து போயிடனும். நம்ம பெரிய சேனல்ல வந்துட்டா லைஃப் செட்டில்லாம் கிடையாது.
என்னை மாதிரி எவ்ளோ பேரு, பல வருஷமா மீடியால இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காம கஷ்டப்படுறாங்க. ஆனா, நான் வந்து 5 வருஷம்தான் ஆகுது. இந்த ஃபீல்ட்ல கத்துக்கிட்டு மெதுவாதான் போகமுடியுங்கிறது தெரியுது. அதனால வெயிட் பண்ணி போகலாம்னு தீபிகா மன உறுதியுடன் கூறுகிறார். ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு தீபிகா அளித்த பேட்டி இதோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“