பி.காம் படித்துக் கொண்டே தொகுப்பாளராக பணிபுரிந்த மகேஸ்வரி, படித்து முடித்ததும் வேற ஃபீல்டுக்கு மாற நினைத்தார். ஆனால் மீடியா இவரை கெட்டியாக பிடித்துக் கொண்டது.
சன் மியூசிக் சேனல் வந்த புதிதில் அதில், நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே மகேஸ்வரி. இவர் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, ஆங்கரிங் ஆடிஷனுக்கு சென்று அதில் தேர்வாகி சன் மியூசிக்கில் விஜே ஆனார். அன்று தொடங்கிய அவரது மீடியா பயணம் 18 ஆண்டுகளை கடந்து இன்றும் தொடர்கிறது.
Advertisment
அப்பா வீட்டை விட்டு சென்றதால், 14 வயதிலே குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் விஜே மகேஸ்வரி.
பி.காம் படித்துக் கொண்டே தொகுப்பாளராக பணிபுரிந்த மகேஸ்வரி, படித்து முடித்ததும் வேற ஃபீல்டுக்கு மாற நினைத்தார். ஆனால் மீடியா இவரை கெட்டியாக பிடித்துக் கொண்டது.
பிறகு திருமணமாகி, குழந்தை பிறந்ததும் ஒன்றரை வருடம் மீடியாவில் இருந்து விலகியிருந்தார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. கூடிய விரைவிலே விவகாரத்தில் முடிந்தது.
அதன் பிறகு மீடியாவுக்கு மீண்டும் கம் பேக் கொடுத்த மகேஸ்வரி, சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். புதுக்கவிதை, தாயுமானவன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் 'அதிர்ஷ்டலட்சுமி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. தற்போது மகேஸ்வரி, சென்னையில் தனது பெற்றோர் மற்றும் மகன் கேசவ்வுடன் வசித்து வருகிறார்.
மகேஸ்வரியின் உலகமே அவருடைய மகன் கேசவ் தான். தொழிலில் பிஸியாக இருப்பதால், மகனை அப்படியே விட்டுவிடக் கூடாது, அவனை நன்றாக வளர்க்க வேண்டுமென நினைத்து ஒரே மகனை கனத்த இதயத்துடன் ஹாஸ்டலில் சேர்த்துள்ளார்.
அவனை நன்றாக வளர்த்து இந்த உலகத்துக்கு ஒரு அற்புதமான மனிதரை கொடுக்க வேண்டும் என்பதுதான் மகேஸ்வரியின் ஆசை.
தன் வாழ்க்கையில் அப்பா, கணவர் இருவருமே தன்னை விட்டு சென்றதால், ஒரு கட்டத்தில் ஆண்கள் மேல் நம்பிக்கையை இழந்துவிட்டார் மகேஸ்வரி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட மகேஸ்வரி, தன் திருமண வாழ்க்கை குறித்தும், மகனை குறித்தும் பேசினார். வரப்போகிற கணவன் என் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வார் என தெரியாது. அதனால் தான் இரண்டாவது திருமணம் குறித்து நான் யோசிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் தன் மகனை பற்றி பேசுகையில், அவன் கடைசியா ஒரு வயசு இருக்கும்போது அப்பாவ பார்த்தான். இத்தனை வருஷம் ஆயிடுச்சு. இதுவரை ஒருமுறை கூட அவன் அப்பாவை பத்தி என்கிட்ட கேட்டது கிடையாது. கேட்டா நான் கஷ்டப்படுவேன் நினைச்சு, கேட்கவே மாட்டான், என்னைவிட என் பையன் தான் ரொம்ப ஸ்ட்ராங் என கண்கலங்கினார் மகேஸ்வரி.
மகேஸ்வரி பாணா காத்தாடி, மந்திரப் புன்னகை, கந்தசாமி, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட சில படங்களிலும் மகேஸ்வரி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் முதல் மனைவியாக மகேஸ்வரி நடித்திருந்தார்.
மேலும் காஸ்டியூம் டிசைனராகவும் இருக்கிறார் விஜே மகேஸ்வரி. கூடவே இண்டிரியர் டிசைனிங்கும் செய்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“