சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.
பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த மணிமேகலை கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது.
பிறகு மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை ஒரு போட்டியாளராக தன் கணவனுடன் கலந்து கொண்டார். அதில் இவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன்பிறகு மணிமேகலை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறிவிட்டார். ஆனால் இவர் தமிழகம் முழுவதும் வைரலானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.
பிறகு, கொரோனா லாக் டவுனில் மணிமேகலை, தன் கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதிருந்து தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லா பண்டிகைக்கும் ஊருக்கு சென்று, தங்கள் நண்பர்களை சந்தித்து, வீடியோ போடுவதை மணிமேகலை வழக்கமாக்கி விட்டார். மணிமேகலையின் குடும்பத்தினரும் அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
தற்போது மணிமேகலை ரியாலிட்டி ஷோ, யூடியூப் என பிஸியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 34 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மணிமேகலையை பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மணிமேகலை இப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அதில் மணிமேகலையும், ஹூசைனும் 5 வருடங்களுக்கு முன் சேர்ந்து எடுத்த படத்தை பகிர்ந்து; ஹுசைன் மணிமேகலையின் 5 வருடம் பழமையான படம். 2017 - மறக்க முடியாத, நேசத்துக்குரிய, வாழ்க்கையை மாற்றிய ஆண்டு. ஐந்தாண்டுகள் திருமதி ஹுசைனாக இருந்தேன்.
இன்னும் பல வருடங்கள் ஒன்றாக இருக்க வாழ்த்துகள். லவ் யூ ஹூசைன். எங்களுக்கு 5வது ஆண்டு திருமண வாழ்த்துக்கள் என்று எழுதியுள்ளார்.
இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.